Published:Updated:

`ஜெ., மரணத்துக்கான காரணத்தை அறிய அதிமுக-வினரும் ஆர்வமாக இருக்கிறார்கள்!’ -சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``அதிமுக தலைமை பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். நாடாளுமன்றமும் சட்டப்பேரவையும் விவாதம் செய்வதற்கான இடம்தான். அங்கு கேள்வி கேட்கக் கூடாது எனச் சொல்வது நியாயமல்ல” என்கிறார் கே.எஸ்.அழகிரி

``மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்து அறிந்துகொள்ள பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவது நியாயமானதுதான்” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்திருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

திருவாரூர் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ``தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அனைத்து வாக்குறுதிகளையும் 100 நாள்களில் நிறைவேற்றிவிட முடியாது. தேர்தல் வாக்குறுதிகள் ஐந்து வருடங்களுக்கானவை. இந்த 100 நாளில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியும், அவரது நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியவை. ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க முயலும் பாஜக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. தனியார்மயத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலும் தனியார்மயமாக மாற்றிவிடக் கூடாது என்றுதான் சொல்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

`இதை ஆளும்கட்சியினர் உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது'- கே.எஸ் அழகிரி!

மேலும் பேசிய கே.எஸ்.அழகிரி, ``மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்து அறிந்துகொள்ள அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இது குறித்து கேள்வி எழுப்புவது நியாயமானதுதான். இதனால்தான் எங்களது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புகிறார். அதிமுக அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். நாடாளுமன்றமும் சட்டப்பேரவையும் விவாதம் செய்வதற்கான இடம்தான். அங்கு கேள்வி கேட்கக் கூடாது எனச் சொல்வது நியாயமல்ல” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு