Published:Updated:

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ... கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்!

ராகவன்
ராகவன்

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ... கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்துவந்தவர் கே.டி.ராகவன். அவரின் பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவியது.

இந்தநிலையில், கே.டி.ராகவன் தனது முகநூல் பதிவில், ``தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்... என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்... நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றிவருகிறேன்.. இன்று காலை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு