Published:Updated:

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வராகப் போட்ட கடைசி கையொப்பம்! - குமாரசாமி பெருமிதம்!

பிரேம் குமார் எஸ்.கே.

14 மாதக் காலம் காங்கிரஸ் மஜத கூட்டணி ஆட்சியின் பெரும் சாதனை இந்த உத்தரவு என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவில் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு, அதிருப்தி எம்.எல்.ஏ க்களின் ராஜினாமாவால் முடிவுக்கு வந்தது. கடந்த இரு வாரங்களாகவே கர்நாடகா, இந்திய அளவில் பெரும் கவனம் பெற்ற மாநிலமாக மாறி இருந்தது.

குமாரசாமி
குமாரசாமி

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்ததின் காரணமாக குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தார். அதைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் அவரை காபந்து முதல்வராக நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், குமாரசாமியால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளையும் எடுக்க இயலாது. அதனால்தான் நிலமில்லா விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் உத்தரவில் பதவியிலிருந்து விலகும் முன்னே கையொப்பமிட்டதாகக் கூறியுள்ளார் குமாரசாமி.

செய்தியாளர்கள் சந்திப்பில் குமாரசாமி
செய்தியாளர்கள் சந்திப்பில் குமாரசாமி
ANI

குமாரசாமியின் உத்தரவில் நிலமில்லா விவசாயிகளின் கடன்கள், ரூபாய் ஒரு லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட விவசாயிகள், இரண்டு ஹெக்டாருக்கும் குறைவான நிலம் கொண்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட தொகைக்குதான் கடன் ரத்து என்று எந்த வரம்பு கிடையாது என்றார்.

ஒரே ஆண்டில் இரண்டு முதல்வர்கள்... குமாரசாமி கவிழ்ந்தது எப்படி?

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, ``இந்த உத்தரவை கொண்டு வந்ததில் பெரும் திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. இந்த உத்தரவு வரும் முன்னர் கடன் பெற்ற அனைவருக்கும் இது பொருந்தும். இது மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக எடுத்த முடிவு. இந்த உத்தரவு ஒருவருடம் அமலில் இருக்கும். அதற்குள் விவசாயிகள் தங்களின் கடன் விவரங்களைச் சமர்பிக்க வேண்டும்” என்றார்.

குமாரசாமி
குமாரசாமி

14 மாத ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டுவர உதவிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த குமாரசாமி, கடன் ரத்தை இந்த அரசின் பெரும் சாதனையாகக் குறிப்பிட்டார்.