Published:Updated:

`திமுக மா.செ பேச்சை வார்டு செயலாளர் கூட மதிக்கவில்லை!’ -மனுவை வாபஸ் பெற்று கலங்கிய சிபிஐ கட்சியினர்

மனு தாக்கல் செய்த பாரதி முருகன்

``பாரதிமுருகனின் தந்தை அம்பிகாபதி முன்னாள் எம்.எல்.ஏ என்பதும், முன்னாள் முதல்வரின் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது” என கும்பகோணம் மாநகராட்சி சீட்டு விவகாரத்தில் சிபிஐ கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

`திமுக மா.செ பேச்சை வார்டு செயலாளர் கூட மதிக்கவில்லை!’ -மனுவை வாபஸ் பெற்று கலங்கிய சிபிஐ கட்சியினர்

``பாரதிமுருகனின் தந்தை அம்பிகாபதி முன்னாள் எம்.எல்.ஏ என்பதும், முன்னாள் முதல்வரின் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது” என கும்பகோணம் மாநகராட்சி சீட்டு விவகாரத்தில் சிபிஐ கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

Published:Updated:
மனு தாக்கல் செய்த பாரதி முருகன்

கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய வார்டில், திமுக தலைமை வலியுறுத்தியும் அதனை கேட்காமல் அக்கட்சியை சேர்ந்த வார்டு செயலாளர் சுயேச்சையாக போட்டியிடுவதால் கடைசி நேரத்தில், சிபிஐ வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றார். கும்பகோணம் திமுக, மாவட்ட செயலாளர் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது வார்டு செயலாளர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என சிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் 
மாநகராட்சி தேர்தலுக்காக பாரதி முருகன் அச்சடித்த நோட்டீஸ்
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலுக்காக பாரதி முருகன் அச்சடித்த நோட்டீஸ்

இது குறித்து சிபிஐ கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், `கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணியில் உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு 7 இடங்களை கேட்டது. இதற்காக திருத்துறைப் பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி தலைமையில், திமுகவை சேர்ந்த கும்பகோணம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர பொறுப்பாளர் தமிழழகன் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. கிட்டதட்ட ஐந்து கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஏழாவது வார்டு என ஒரு வார்டை மட்டும் சிபிஐக்கு ஒதுக்கியது.

அந்த வார்டில் எங்க கட்சியை சேர்ந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பாரதிமுருகன் போட்டியிட முடிவு செய்து 3-ம் தேதி மனு தாக்கல் செய்தார். சீட்டு எங்களுக்கு ஒதுக்கிய உடனே திமுக வார்டு செயலாளரான ரமேஷ்குமார், நான் போட்டியிடுவதற்கு வார்டை தயார் செய்து வைத்திருந்தேன் என கூறி எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. மனு தாக்கல் செய்யும் போது அழைத்தும் வரவில்லை. இதனை தொடர்ந்து கல்யாண சுந்தரத்துடன் சென்று மனு தாக்கல் செய்தார் வேட்பாளர் பாரதிமுருகன்.

திமுகவுக்கு அனுப்பிய வாபஸ் கடிதம்
திமுகவுக்கு அனுப்பிய வாபஸ் கடிதம்

அதன் பின்னர் 4-ம் தேதி வார்டு செயலாளரான ரமேஷ்குமார் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். எங்களுக்கு கொடுத்தது ஒரே ஒரு சீட்டு அதிலும் திமுக நிர்வாகி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இது என்ன நியாயம்? கூட்டணி தர்மம்? என பாரதி முருகன் கல்யாண சுந்தரத்திடம் முறையிட்டிருக்கிறார். நான் பேசி வாபஸ் வாங்க வைக்கிறேன் நீங்க தேர்தல் பணியை பாருங்கனு அவர் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகும் ரமேஷ்குமார் திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுப்பட்டு வந்தார். பின்னர் திமுக நிர்வாகிகள் தனக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள் என்பதை உணர்ந்த பாரதி முருகன் இந்த விவகாரத்தை மாநில செயலாளர் முத்தரசன் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவர் திமுக தலைமையிடம் இதனை கொண்டு சென்றார். திமுக தலைமையும் கல்யாணசுந்தரம் மூலமாக வாபஸ் வாங்க வைப்பதாக தெரிவித்தனர்.

முத்தரசன்
முத்தரசன்

வாபஸ் நாளான கடைசி நாளிலும் இது தொடர்பாக முத்தரசன் திமுக தலைமையிடம் பேசினார். 12 மணிக்குள் வாபஸ் வாங்கிடுவார் என உத்தரவாதம் கொடுத்துள்ளனர். ஆனால் செய்யவில்லை. நேரம் கடந்ததே தவிர மனு வாபஸ் பெறவில்லை. அதன் பிறகு முத்தரசன், `திமுக நிர்வாகிகள் ஏதோ உள் நோக்கத்துடன் செயல்படுகின்றனர் கொடுத்த ஒத்த சீட்டுக்கும் ஒத்துழைப்பு தர மறுக்கிறாங்க. அதனால அந்த சீட்டும் நமக்கு வேண்டாம் முறைப்படி கடிதம் எழுதி கொடுத்துட்டு நீங்க வாபஸ் வாங்கிடுங்கனு’ பாரதி முருகனிடம் தெரிவித்தார்.

அதன்படியே பாரதிமுருகன் செய்து விட்டார். அப்போது கல்யாணசுந்தரம் வார்டு செயலாளர் என் பேச்சை கேடகவில்லை என கூறியிருக்கிறார். மாவட்ட செயலாளர் பேச்சை வார்டு செயலாளர் கேட்கவில்லை என்றால் எந்த அளவிற்கு கட்சி நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் திமுக தலைமையின் பேச்சை கேட்காமல் செயல்பட்ட அக்கட்சி நிர்வாகி மீது மாவட்ட செயலாளர் இது வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது குறிப்பிடதக்கது. மறைந்த பாரதிமுருகனின் தந்தை அம்பிகாபதி கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ என்பதும், முன்னாள் முதல்வரின் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி.மு.க-அண்ணா அறிவாலயம்
தி.மு.க-அண்ணா அறிவாலயம்

பாரம்பர்யமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த பாரதிமுருகனுக்கு ஒதுக்கிய சீட்டுக்கு திமுகவினர் ஒத்துழைப்பு கொடுக்காமல் அவமானப் படுத்தியதுடன் கூட்டணி தர்மத்துக்கு எதிராக செயல்பட்டதாக கொந்தளித்தனர்.

இது குறித்து பாரதி முருகனிடம் பேசினோம், ``எனக்கு திமுகவில் சீட் கொடுத்தனர். ஆனால் நிர்வாகிகள் எனக்கான ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இதனை கட்சி தலைமையிடம் தெரிவித்தேன் அவர்கள் சொன்னதற்கு கட்டுப்பட்டு என் மனுவை வாபஸ் பெற்று விட்டேன்” எனத் தெரிவித்தார்.