Published:Updated:

கும்பகோணம்: அம்மா உணவகத்தில் தன் சொந்தச் செலவில் உணவு வழங்கும் எம்.எல்.ஏ!

உணவு கொடுக்கும் எம்.எல்.ஏ
உணவு கொடுக்கும் எம்.எல்.ஏ ( ம.அரவிந்த் )

லாக்டெளன் முடியும்வரை தினமும் அம்மா உணவகத்தில் தன் சொந்தச் செலவில் உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்.

கொரோனா இரண்டாவது அலை பரவிவருவதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, தமிழக அரசால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் வருமானத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் லாக்டெளன் முடியும்வரை தினமும் அம்மா உணவகத்தில் தன் சொந்தச் செலவில் உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன்.

உணவு கொடுக்கும் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்
உணவு கொடுக்கும் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்

கும்பகோணம் நகராட்சி சார்பில், தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இங்கு காலையில் டிபன், மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை, புளி உள்ளிட்ட சாதங்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகின்ரன. கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் காலை, மதியம் என இரண்டு வேளை உணவுக்கான செலவை வழங்கிவருகிறார். இந்தநிலையில், அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இரண்டு வேளை உணவு வழங்கப்பட்டுவரும் நிலையில், தற்போது இரவும் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் பேசி தினமும் இரவு டிபன், மதியம் காய்கறிக் கூட்டுடன் சேர்த்து சாதம் வழங்குவதற்குத் தேவைப்படும் பணத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு