Election bannerElection banner
Published:Updated:

`தமிழ்ச் சமூகத்தை சாகும்வரை எனது நாவால் தட்டி எழுப்புவேன்!’-மதுரை மாநாட்டில் தா.பாண்டியன் ஆற்றிய உரை

தா.பாண்டியன் இறுதி உரை
தா.பாண்டியன் இறுதி உரை

`நீங்கள் அடிமையாவதோடு தமிழ் மண்ணையும் அடிமையாக்க நினைத்தால் எந்தக் கொம்பானாக இருந்தாலும் தடுப்போம்’ - தா.பாண்டியன்

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 'தா.பா' என்று அன்பாக அழைக்கப்பட்ட தா.பாண்டியன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். அவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் இரங்கலைத் தெரிவித்துவருகிறார்கள்.

தா.பாண்டியன் இறுதி உரை
தா.பாண்டியன் இறுதி உரை

மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தை பூர்வீகமாகக்கொண்ட தா.பாண்டியன், அப்பகுதியில் பள்ளிக்கல்வியை தொடங்கி, காரைக்குடியில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து பேராசிரியர், வழக்கறிஞர், தமிழறிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், களப்போராளி, நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல தளங்களில் செயல்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மூன்று முறை பணியாற்றியவர்.

அவரின் கணீரென்ற குரலும், ஆழமான கருத்தும் அனைவரையும் கவரும். அவர் கடைசியாக உரையாற்றியது கடந்த வாரம் மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில், தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டார் தா.பாண்டியன்.

மதுரையில் நடந்த சி.பி.ஐ அரசியல் மாநாடு
மதுரையில் நடந்த சி.பி.ஐ அரசியல் மாநாடு

மெலிந்த தேகத்துடன் வீல் சேரில் அமர்ந்தபடி பேசினாலும், அவர் குரலில் எப்போதும் இருக்கும் கம்பீரம் குறையவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிமீது தனக்குள்ள பிடிப்பையும், நிகழ்கால ஆட்சியாளர்கள் மீதான கோபத்தையும் தன் பேச்சில் வெளிப்படுத்தினார்.

பொது மேடையில் அவரின் இறுதி உரை, இதோ....

``எழுந்து நின்று பேச ஆசை.... உட்கார்ந்து பேசினாலும் சிறப்பாகப் பேசுவேன். தமிழ்ச் சமூகத்தை சாகும்வரை எனது நாவால் தட்டி எழுப்புவேன். கம்யூனிசக் கொள்கையை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த இயலாது.

`நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...’ என்ற நிரூபித்த நக்கீரர் வாழ்ந்த மதுரை மாநகரில் நடைபெறும் இம்மாநாட்டின் மூலம், வரும் தேர்தலில் நம் வெற்றியைப் பிரகடனம் செய்கிறோம். இதில் கலந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் புடம்போட்ட தங்கங்கள்.

தோழர் தா.பாண்டியன்
தோழர் தா.பாண்டியன்

அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கு தலை வணங்குகிறது. முட்டுக் கொடுக்கிறது. எடப்பாடிக்கு வகுப்புவாதமும், பதவிக்குத் தலை வணங்கும் நோயும் வந்திருக்கிறது. நீங்கள் அடிமையாவதோடு, தமிழ் மண்ணையும் அடிமையாக்க நினைத்தால் எந்தக் கொம்பானாக இருந்தாலும் தடுப்போம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்!

எடப்பாடிக்கு நீதிமன்றம் மூலமாக அபாய அறிவிப்பு வந்திருக்கிறது. மோடி சென்னைக்கு வந்தவுடனே, சின்ன வெங்காயம் விலை கிலோ 162 ரூபாயாக உயர்ந்துவிட்டது.

வங்கியிலுள்ள பணத்தை தேர்தல் செலவுக்காகச் சூறையாடுகிறார்கள். இதை சுப்பிரமணியன் சுவாமியே கூறியிருக்கிறார். பொருளாதாரம் தெரியாதவரே தற்போது நிதி அமைச்சராக இருக்கிறார்.

தா.பாண்டியன் இறுதி உரை
தா.பாண்டியன் இறுதி உரை

பா.ஜ.க-வை தமிழகத்தில் கால்பதிக்க விட மாட்டோம் என்ற சூளுரையோடு பணியாற்றுங்கள்" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.

``இந்த மாநாட்டுக்குப் பிறகு சில நாள்களில் அவருக்கு உடல்நலமில்லாமல் போக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் தோழர் தா.பா..." என்று கலங்குகிறார்கள் தோழர்கள்.

"என் சிவப்புத் துண்டை என் கிட்டக் கொடுத்துடுங்கம்மா..." - எப்படி இருக்கிறார் தா.பாண்டியன்?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு