Published:Updated:

`செந்தில் பாலாஜியைக் காப்பாற்றுகிறார்கள்; ராஜேந்திர பாலாஜியைப் பழிவாங்குகிறார்கள்!’ - வழக்கறிஞர்

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

``ராஜேந்திர பாலாஜியின் வழக்கில் மட்டும் காவல்துறை ஆர்வம் காட்டவேண்டிய அவசியம் ஏன்?” என அவரின் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பண மோசடி வழக்கில் கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மதுரை மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரிதாஸ்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், ``ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்டக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் இருக்கிறார். அவரை வழக்கில் ஆஜராகவிடாமல் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் 11 வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பியுள்ளது. இதிலிருந்தே இது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பழிவாங்குவதற்காகவே அனுப்பப்பட்ட வழக்கறிஞரின் படை என்பது தெளிவாகத் தெரிகிறது.

வழக்கறிஞர் பேட்டி
வழக்கறிஞர் பேட்டி

உயர் நீதிமன்றத்தில் அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்காகச் சிறிது காலம் ஒதுங்கியிருந்தார். இது தலைமறைவு கிடையாது. இதே விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரூ.3 கோடிக்கு மேல் ரூ.10 கோடிக்குள்ளாக 22 பண மோசடி வழக்குகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த வழக்குகளை விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ராஜேந்திர பாலாஜி மீது அளிக்கப்பட்ட புகார்களை மட்டும் கையில் எடுத்திருக்கிறதென்றால் பழி வாங்கும் நடவடிக்கை இல்லையா? இந்தப் பண மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியே விஜய நல்லதம்பிதான். ஆனால், இன்றுவரை அவரைத் தேடிச்செல்லவோ, கைதுசெய்யவோ குற்றப்பிரிவு போலீஸார் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி வரை பணம் பெற்ற அவரை இதே தி.மு.க அரசு எப்படிக் காப்பாற்றியது என்பது எல்லோருக்குமே தெரியும். விஜயநல்லதம்பி மீது இதுவரை 32 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆவினிலோ, அரசுத்துறையிலோ வேலை வாங்கித் தருவதாக விஜயநல்லதம்பி பெற்ற பணத்துக்கும், ராஜேந்திர பாலாஜிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. விஜயநல்லதம்பியைப் பிடித்து முழுமையாக விசாரணை நடத்தினால்தான் முழு உண்மை தெரியவரும். ராஜேந்திர பாலாஜிமீது பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கின் புகார்தாரரான ரவீந்திரனே, `நான் ராஜேந்திர பாலாஜியை நேரில் பார்க்கவே இல்லை. அவரிடம் பணத்தைக் கொடுக்கவே இல்லை. விஜயநல்லதம்பியைத்தான் எனக்குத் தெரியும். அவரிடம்தான் பணத்தைக் கொடுத்தேன். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான்” என உச்ச நீதிமன்றத்தில் மனு மூலம் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் பேட்டி
வழக்கறிஞர் பேட்டி

இந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜியை மட்டுமல்ல, அவருக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களையும் போலீஸார் கொடுமைப்படுத்தினார்கள். வழக்கறிஞரின் வீட்டில் சட்டவிரோதமாகச் சோதனை நடத்தினார்கள். ஒரு வழக்கறிஞரின் பணியையே முடக்க நினைக்கிறது தற்போதைய சர்வாதிகார தி.மு.க அரசு. போலீஸார் மீது பார்கவுன்சிலில் புகார் அளித்துள்ளோம்” என்றார்கள்.