Published:Updated:

அன்பார்ந்த வீடியோகால் பெருமக்களே!

அன்பார்ந்த வீடியோகால் பெருமக்களே!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பார்ந்த வீடியோகால் பெருமக்களே!

அவங்க பாசத்துக்குக் கட்டுப்பட்டு நாம பதில் சொல்லித்தான் ஆகணும்.''

பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாதுன்னு அறிவிப்பு வந்த உடனே, ஆன் லைன் மீட்டிங்குகளுக்கு ஜம்ப் ஆன நம்ம தமிழக அரசியல்வாதிகள், ‘பிறந்த குழந்தைக்குப் பேர் வைக்கிறது, காது குத்துக்குத் தலைமை தாங்குவது, நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைக்கிறதுன்னு’ ரொம்ப பிஸியாகிட்டாங்க. ஆனாலும் ஃப்ளோவா பேசிட்டு இருக்கும்போதே ‘`இங்க யாராச்சும் இருக்கீங்களா’’ன்னு புதுப்பேட்டை தனுஷ் ரேஞ்சுக்குப் பல திகில் அனுபவங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி, வீடியோ மீட்டிங்கில் அவங்களுக்குக் கிடைச்ச சுவாரஸ்யமான அனுபவங்கள் இவை...
கனிமொழி
கனிமொழி

கனிமொழி, எம்.பி தி.மு.க

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“எங்க மகளிரணியச் சேர்ந்த இரண்டு பேர், மகாராஷ்டிரா வரைக்கும் போய் ஒரு பொண்ண அவங்க வீட்டுல விட்டுட்டு வந்தாங்க. அவங்கள சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கல. போன்ல மட்டுமே அப்போ நன்றி சொன்னேன். ஆன் லைன் மீட்டிங் மூலமா, அவங்க முகத்தைப் பார்த்து நன்றி சொல்ல வாய்ப்பு கிடைச்சது. மகளிரணியச் சேர்ந்த சகோதரிகள் பலர், பொருளாதார ரீதியா பலமா இல்லைன்னாலும், தங்களால் முடிஞ்ச அளவுக்கு பத்துப் பேருக்கோ, இருபது பேருக்கோ ஊரடங்கு காலத்துல சாப்பாடு கொடுத்திட்டு இருக்காங்க. நேர்ல பார்த்துப் பேசும்போது, இதென்ன பெரிய விஷயம்னு பகிர்ந்துக்கக்கூட மாட்டாங்க. ஆன்-லைன்ல பேசும்போது அந்த மாதிரியான விஷயங்களக்கூட நம்மகிட்ட பகிர்ந்திருக்காங்க. தன்னால முடிஞ்சத மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிற அவங்க மனசைப் பார்க்கும்போது, ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. மகளிரணியில எப்போதுமே கேலி, கிண்டல் பண்ணிட்டு கேஷுவலாதான் இருப்போம். அதே கேலி, கிண்டல் ஆன்-லைன் மீட்டிங்குகளிலும் தொடரத்தான் செய்யுது. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் போன்ல பேசியிருப்போம்...ஆனா, ஆன்-லைன்ல எனக்காக ரொம்ப நாளா காத்திட்டிருந்தேன்னு சொல்லுவாங்க...இப்போதானே பேசினோம், அதுக்குள்ள என்னன்னு நான் கேட்க, மத்தவங்க எல்லோரும் சிரிக்க ஜாலியா இருக்கும். அண்ணன் தளபதிகூட ஒரு மீட்டிங்ல, கட்சி நிர்வாகி ஒருத்தர் தன்னையறியாம எழுந்து நின்னு பேச ஆரம்பிச்சுட்டாரு... அப்புறம் அண்ணன் சொன்னதும்தான் உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாரு. அதேமாதிரி, ஒரு மீட்டிங்ல முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நீண்ட வெள்ளை தாடி, மீசையோடு கலந்துகிட்டார். சின்ன வயசுல இருந்து பார்த்துட்டிருக்கேன், அவங்கள இதுக்கு முன்னாடி அப்டி பார்த்ததே இல்ல. மீட்டிங் முடிஞ்சதும் கால் பண்ணி ‘என்ன சாமியார் ஆகிட்டீங்களா’ன்னு கிண்டல் பண்ணினேன்... `வீட்டுலதானப்பா இருக்கோம். அதான் இப்டி’ன்னு சொன்னாங்க. அண்ணன்கூட மாவட்டச் செயலாளர் கூட்டத்துல செந்தில் பாலாஜிய ‘ஏன் தாடியோட இருக்கீங்க’ன்னு கேட்டிருக்கார். இப்டி மீட்டிங்ல நோட் பண்ணி கேலி, கிண்டல் பண்ணுற விஷயங்களும் நிறையா நடக்குது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொல்.திருமாவளவன், எம்.பி வி.சி.க

‘`இந்தக் கொரோனா காலத்துக்கு முன்பே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தற சூழல் எனக்கு உண்டாச்சு. 2013 மே மாதம், கடலூர் மாவட்டத்துல திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு வர்றதா ஒப்புதல் கொடுத்திருந்தேன். சரியா அந்த மாசத்துல விழுப்புரம் மாவட்டத்துக்குள்ள நுழையுறதுக்கு எனக்குத் தடை போடப்பட்டது. ஆனா, நிகழ்ச்சிகளுக்கு நான் வந்தே ஆகணும்னு கட்சிக்காரங்க ஆசைப்பட்டாங்க. அப்போதான், முதன்முறையா ஸ்கைப் மூலமா சென்னையில் இருந்தே அந்தத் நிகழ்ச்சிகளை நடத்தி வச்சேன். அதுக்குப் பிறகு, திரும்ப, கொரோனா காலத்துலதான் இந்த மாதிரி தொழில்நுட்பங்கள திரும்பத் தேடுற நெருக்கடி உண்டாச்சு. கால்ல சக்கரத்தக் கட்டிக்கிட்டு எப்போதும் சுற்றுப்பயணத்துலேயே இருக்கும் எனக்கு, ஊரடங்கால, தனியா தங்க நேர்ந்த சூழல் அதிகமான மன அழுத்தத்தைக் கொடுத்துச்சு. அப்புறம்தான், ஆன்லைன் ஆப்கள் மூலமா கட்சிப் பொறுப்பாளர்கள்கிட்ட பேச ஆரம்பிச்சேன். இப்போவரை தினமும் குறைஞ்சது எட்டு மணி நேரத்துக்கும் மேல, இணையத் தொடர்புலதான் இருக்கேன். திருமணங்கள், குழந்தைகளுக்குப் பெயர் வைக்குறது, பிறந்தநாள் நிகழ்வுகள் போன்றவற்றையும்கூட இணைய வழியிலேயே செஞ்சிட்டிருக்கேன். நேற்றுகூட கட்சிப் பொறுப்பாளர் புதியவன் குழந்தைக்கு ‘அமுதவன்'னு பேர் சூட்டினேன்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

கட்சியின் பொறுப்பாளர்கள் குடும்பத்தோடு இணைப்புக்கு வரும்போது குடும்பமே பேரானந்தம் அடையுறதக் கண்டு நமக்கும் மகிழ்வா இருக்கும். அவங்க வீட்டுக் குழந்தைகளும் வந்து பேசுவாங்க. ரொம்பத் தீவிரமா விவாதம் பண்ணிட்டு இருக்கும்போது இடையில வந்து பேசுவாங்க. ஒட்டுமொத்தமா அத்தனை பேரு மனநிலையையும் மாத்திடும் அந்த மழலை மொழி. மிகவும் நெகிழ்வான சம்பவம்னா, எங்க அம்மா ஒருமுறை இணையவழியா வந்து எனக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்தாங்க. பல வேடிக்கைகளும் நடக்கும். நாம தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் பேசுறதுக்காக வேகமா பேசிட்டிருப்போம். ஆனா, “அண்ணா.. சாப்ட்டீங்களா... என்ன சாப்பாடு... என்ன குழம்பு?”ன்னு கட்சிப் பொறுப்பாளர்கள் வீட்டுல உள்ளவங்க ரொம்பப் பொறுமையா கேட்டுட்டிருப்பாங்க.. அவங்க பாசத்துக்குக் கட்டுப்பட்டு நாம பதில் சொல்லித்தான் ஆகணும்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிநேகன்
சிநேகன்

சிநேகன் ம.நீ.ம

‘`நான் ஒரு டைம், வீட்டுல சமைச்சுக்கிட்டே, மீட்டிங்ல கலந்துகிட்டேன். கரண்டி எடுக்குறது, கிண்டுறதுன்னு என் இஷ்டத்துக்கு வேலை பார்த்துட்டிருந்தேன். மீட்டிங் முடிஞ்சதும் நண்பர்கள்கிட்ட இருந்து போன் வந்தது. `உலகத்துல என்ன நடந்தாலும் நீ உன் விஷயத்துல கரெக்ட்டா இருக்கியேப்பா, என்ன சமையல்...ரொம்ப மும்முரமா சமைச்சுக்கிட்டு இருந்தியேன்னு’ கேட்கவும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டுச்சு. அப்போதான் வீடியோவ மியூட் பண்ணாம சமைச்சிருக்கேன்னு தெரிஞ்சது. நல்லவேளையா தலைவர் கவனிக்கல. பார்த்திருந்தா, நிச்சயமா தனியா கூப்பிட்டு என்ன சிநேகன்னு கேட்டிருப்பார். அவர் பார்க்கலைன்னு கன்பார்ம் பண்ணுன அப்புறம்தான் நிம்மதி ஆச்சு. அப்போ இருந்து வீடியோ மியூட் பண்ணுறதுல உஷாரா இருக்கேன். ஜூம் மீட்டிங்கில் இன்னும் பல வேடிக்கையான விஷயங்கள் நடக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கோலத்துல இருப்பாங்க. அதேபோல, நேர்ல தலைவரைப் பார்க்க வாய்ப்பில்லாத பலருக்கு ஜூம் மீட்டிங்கில் தலைவரைப் பார்க்க, பேச வாய்ப்பு கிடைக்குது. அவங்க, நாற்பது வருஷமா தலைவர் மேல இருந்த பாசத்தையெல்லாம் கண் கலங்கி அப்படியே மொத்தமா கொட்டுவாங்க... பார்க்குறதுக்கே நெகிழ்ச்சியா இருக்கும்.”

விஜயதாரிணி
விஜயதாரிணி

விஜயதாரிணி, எம்.எல்.ஏ காங்கிரஸ்

‘`ஆல் இந்தியா லெவல்ல நடந்த மகிளா காங்கிரஸ் மீட்டிங் எல்லாத்துலயும் கலந்துக்க முடிஞ்சது. எங்க தலைவர் ராகுல்காந்திகூடவும் மீட்டிங்ல நேரடியாப் பேச முடிஞ்சது. டெல்லிக்குப் போகவேண்டிய அலைச்சல் இல்லை. பணமும் செலவு செய்யவேண்டியது இல்ல. உண்மையாகவே ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கு. நாம ரொம்ப தூரத்துல இருந்து பேசினாலும், பக்கத்துல இருந்து பேசுற ஒரு உணர்வைக் கொடுக்குது. ஆரம்பத்துல ஒருத்தர் பேசும்போது மத்தவங்க குறுக்க பேச ஏகப்பட்ட ரகளைகள் நடந்தது. இப்போ வரிசையா நிறுத்திப் பேசப் பழகிக்கிட்டோம். ஒரு மீட்டிங், விவாதம் போகும்போது நல்லா ரெடியாகிப் போகணும். ஆனா, ஆன் லைன் மீட்டிங்ல நைட்டி மேல துப்பட்டாவப் போட்டுட்டுகூட உட்கார முடியுது. பெண்களுக்கு ரொம்ப வசதியாதான் இருக்குது, இந்த ஆன்-லைன் மீட்டிங். வெளிநாட்டுல இருந்து தமிழ்நாட்டுக்கு வரமுடியாமத் தவிச்சுப் போயிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண், உலகத் தமிழர்கள் கலந்துகிட்ட ஒரு ஜூம் மீட்டிங்ல என்கிட்ட கண்ணீரோட தகவல் சொன்னாங்க. அவங்க தூதரகத்துல பேசி அவங்க இங்க வர ஏற்பாடு செஞ்சேன். இந்த மாதிரி பல நல்ல விஷயங்களும் செய்ய முடியுது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.’’

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

கே.டி.ராகவன் (பா.ஜ.க)

‘`பொதுவா 10 மணிக்கு மீட்டிங்னு சொன்னா, டிராபிக் அது இதுன்னு காரணம் சொல்லி, 12 மணிக்குத்தான் சிலர் வருவாங்க. ஆன் லைன் மீட்டிங்ல 5 மணிக்கு மீட்டிங்னு சொன்னா, 4.50-க்கே எல்லோரும் வந்துடறாங்க. ஏதாவது காரணம் சொல்லி, மீட்டிங் வராம இருக்குறது, லேட்டா வர்றதுக்கெல்லாம் ஆன்-லைன் மீட்டிங் வேலை இல்லாமப் பண்ணிடுச்சு. எல்லோரும் ஸ்கிரீன்ல இருக்கிறதால அதிகப்படியான உரையாடல் நிகழ வாய்ப்பா இருக்கு. மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எல்லோர்கூடவும் கேசுவலா பேசிச் சிரிக்க முடியுது. ரொம்ப வசதி என்னன்னா ஃபார்மல் டிரஸ்ல இருக்கவேண்டிய அவசியம் இல்ல. டிபிக்கல் ஒயிட்&ஒயிட் டிரெஸ்ஸ ஃபாலோ பண்ண வேண்டிய தேவவை யுமில்ல’’

மகேந்திரன்
மகேந்திரன்

மகேந்திரன் சி.பி.ஐ

‘`இணையதளங்களைப் பயன்படுத்துகிற அறிவுபூர்வமான இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியங்களை இந்த ஆன்-லைன் மீட்டிங்குகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. அவங்களோடு, புதிய விஷயங்கள், புதிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க, உரையாடக்கூடிய வாய்ப்புகள் அமைஞ்சிருக்கு. அது மிகவும் பயனுள்ளதாக இருக்கு. இந்த மீட்டிங்குகளில் ஒரு தனி ரூம்ல இருந்து நாம ஆடியன்ஸ நேரடியாகப் பார்க்காமப் பேசிட்டு இருக்கோம். ஆடியன்ஸ் கேட்டுட்டு இருக்கிறதா மனசுல கற்பனை பண்ணிட்டுப் பேசிட்டிருப்போம். சில நேரங்களில் நாம பேசிட்டிருக்கும்போதே, நம்ம லைன் கட் ஆகிடும். ஆனா, நாம அது தெரியாம உரை நிகழ்த்திட்டே இருப்போம். யாராவது தனிச்செய்தியில வந்து, ‘நீங்கள் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டீர்கள், அதைச் சரிசெய்யுங்கள், இதைச் சரி செய்யுங்கள்’னு மெசேஜ் அனுப்பின பின்னாடிதான் நாம நமக்கே பேசிட்டிருந்த விஷயம் தெரியவரும். நாம மூச்சுவிடாம பேசினதெல்லாம் வீணாப் போயிருக்கும். பிரச்னையைச் சரி பண்ணிட்டு திரும்ப வரும்போது, நமக்கு அதே ஃப்ளோவுல பேச வராது. தொடர்ச்சி விட்டுப்போறதால மூடு மாறிடும். இந்த மாதிரியான சம்பவங்களும் அடிக்கடி நடந்திடுது.’’