Published:Updated:

தூத்துக்குடி: ’சசிகலாவின் தலைமையை ஏற்போம்’- அதிமுக கூட்டத்தில் தீர்மானம்?! பின்னணி என்ன?

விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

தூத்துக்குடியில் ‘சசிகலாவின் தலைமையை ஏற்போம்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம் அ.தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: ’சசிகலாவின் தலைமையை ஏற்போம்’- அதிமுக கூட்டத்தில் தீர்மானம்?! பின்னணி என்ன?

தூத்துக்குடியில் ‘சசிகலாவின் தலைமையை ஏற்போம்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம் அ.தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

அரசியலை விட்டு விலகப்போவதாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்த சசிகலா, தமிழகம் முழுவதும் பல கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். சில கோயில்களில் யாகங்களையும், விசேச பரிகார பூஜைகளையும் நடத்தினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் பல தொண்டர்களிடம் போனில் பேசி வருகிறார். அவர் பேசும் ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, “சசிகலாவுடன் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கட்சியை விட்டு நீக்கவேண்டும்” என அ.தி.மு.கவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 20-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தது நீக்கப்பட்டுள்ளனர்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

இருப்பினும், அதையையும் மீறி தொண்டர்கள் சசிகலவிடம் பேசி வருகின்றனர். ”என்ன ஆனாலும் சரி புரட்சித்தலைவர், அம்மா காலத்து அ.தி.மு.கவை மீண்டும் கொண்டு வருவேன். தொண்டர்களின் விருப்பத்தின்படி செயல்படுவேன். கொரோனா முடியட்டும். தொண்டர்களை வந்து சந்திப்பேன். என்னை நம்பின யாரையும் கைவிட மாட்டேன்” என கோவை, தர்மபுரி, ஈரோட்டைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் சமீபத்தில் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

’சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க மாட்டோம்’ என அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், துனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் "சசிகலா அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்க வேண்டும். அவர் தலைமையிலான அ.தி.மு.கவை ஏற்க வேண்டும், அ.தி.மு.க தொண்டர்களை சசிகலா சந்திப்பது வரவேற்கக்கூடியது, சசிகலாவுடன் போனில் பேசியவர்களை கட்சியில் இருந்தது நீக்கப்படுவது கண்டிக்கத்தக்கது " என 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்
விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., கட்சிக் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அ.தி.மு.கவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரூபம் வேலனிடம் பேசினோம், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அனைத்து தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பத்தின்படியும், ஒப்புதலின் படியும் கட்சியின் பொதுச்செயலாளராக சின்னம்மா சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது எல்லோருமே சம்மதித்து கையெழுத்தும் போட்டுள்ளனர். அவர் பெங்களூரு சிறைக்குச் சென்ற பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்கள். சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்தது நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு தற்போதும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர், சிறையில் இருந்தது விடுதலையான பிறகு மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக பதவியில் அமர்த்தப்படுவார் எனதான் என்போன்ற பல தொண்டர்களும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்தாலும், தற்போது அவர், மீண்டும் கட்சிக்குள் வர வேண்டும் என்பதும் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. அவரிடம் பேசும் தொண்டர்களிடம் ’சீக்கிரம் கட்சிக்கு வந்துடுவேன்’ என்றுதான் சொல்கிறார்”என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ
செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ

இதுகுறித்து வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூவிடம் கேட்டோம், "அது அ.தி.மு.க கூட்டமே அல்ல. அ.தி.மு.க நிர்வாகிகள் என்ற பெயரில் அ.ம.மு.க நிர்வாகிகள்தான் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் அ.தி.மு.க-வினரே கிடையாது” என்றார். இதையடுத்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டோம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டாலும், கூட்டணி பலம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அ.தி.மு.க சில தொகுதிகளில் குறைவான வாக்குகளில் வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் 66 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. தேர்தலுக்கு முன்பு பொது வாழ்வில் இருந்து விலகிக் கொள்வதாக சசிகலா தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் வெற்றியைப் பாதிக்கும் வகையில், மறைமுகமாக அ.ம.மு.க வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதியில் இருக்கும் கோயில்களுக்கு சென்றார்.கோவில்பட்டி தொகுதியில் டி.டி.வி தினகரன் போட்டியிட்டபோது கூட, ’துரோகிகளுக்கு இடமில்லை’ என்று கூறி இத்தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள். கோவில் வழிபாடு என்ற போர்வையில் மறைமுக தேர்தல் பிரச்சாரத்தை சசிகலா மேற்கொண்டார்.ஆகையால், ’சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில் சசிகலாவிற்கு ஆதரவாக விளாத்திகுளத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வந்தது.

விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்
விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் கிடையாது. அ.தி.மு.கவின் பெயரை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலா அமமுகவிற்கு தலைமையேற்று வழி நடத்தலாம்.அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அ.ம.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக தினகரன் இருக்கிறார். அவர் ஒப்புதல் இருந்தால்தான் அங்கும் செயல்பட முடியும். அதிமுகவில் சேர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும்.அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறியும், அனுமதி பெறாமலும் கூட்டம் நடத்தியதாக ஜெ., பேரவையின் இணைச் செயலாளர் ரூபம் வேலன் உள்ளிட்டர் 80 பேர் மீது விளாத்திகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism