Published:Updated:

உயிருக்கு அச்சுறுத்தல்; முன்னாள் அமைச்சரின் உதவியாளரான நடிகைக்கு சிறையில் 24 மணி நேரப் பாதுகாப்பு!

நடிகை அர்பிதா முகர்ஜி

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பெண் உதவியாளருக்கு, சிறையில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு வழங்கப்படும் உணவு சோதனைக்குப் பிறகே கொடுக்கப்படுகிறது.

உயிருக்கு அச்சுறுத்தல்; முன்னாள் அமைச்சரின் உதவியாளரான நடிகைக்கு சிறையில் 24 மணி நேரப் பாதுகாப்பு!

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பெண் உதவியாளருக்கு, சிறையில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு வழங்கப்படும் உணவு சோதனைக்குப் பிறகே கொடுக்கப்படுகிறது.

Published:Updated:
நடிகை அர்பிதா முகர்ஜி

மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியும், அவருக்கு மிகவும் நெருக்கமான அர்பிதா முகர்ஜியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அர்பிதாவின் இரண்டு வீடுகளிலிருந்து ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு 5 கிலோ தங்கம் மற்றும் சொத்து வாங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தனக்குச் சொந்தமானது இல்லை என்றும், தான் இல்லாத நேரத்தில் பணத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் அர்பிதா முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.

பார்த்தா சாட்டர்ஜி
பார்த்தா சாட்டர்ஜி

அதேசமயம் பார்த்தா சாட்டர்ஜி எடுத்திருக்கும் அதிகமான எல்.ஐ.சி பாலிசிகளில் வாரிசாக அர்பிதா முகர்ஜியை நியமித்திருந்தார். இதனால் அவர்களுக்குள் நீண்ட நாள்களாக தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கிடையே சிறையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்பிதா முகர்ஜி தெரிவித்திருக்கிறார். அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இதே கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்த்தா சாட்டர்ஜி, உதவியாளர் அர்பிதா முகர்ஜி
பார்த்தா சாட்டர்ஜி, உதவியாளர் அர்பிதா முகர்ஜி

இதையடுத்து அர்பிதாவுக்கு சிறையில் பாதுகாப்பு கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதோடு அவருக்குக் கொடுக்கப்படும் உணவு மற்றும் தண்ணீரை சோதித்துக் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பார்த்தா சாட்டர்ஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த மாதம் 23-ம் தேதி கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய சிறப்பு நீதிமன்றம், தேவைப்பட்டால் சிறைக்குச் சென்று இருவரிடமும் விசாரித்துக்கொள்ளும்படி அமலாக்கப்பிரிவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இருவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அர்பிதா முகர்ஜி ஜாமீன் கேட்டு இது வரை மனுத்தாக்கல் செய்யவில்லை. பார்த்தா சாட்டர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிற. அதோடு ஊழலுக்கு இடமில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.