Published:Updated:

மதுரை: ``திருக்குறளை ஆன்மிக நூல் எனச் சுருக்குவது சரியில்லை" - கே.பாலகிருஷ்ணன்

மதுரை நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன்

`திருக்குறளை ஆளுநர் முழுமையாகப் படித்தால் தெரியும். எல்லா மக்களுக்குமான புனிதநூலான திருக்குறளில் ஆன்மிகக் கருத்துகள் மட்டுமல்ல, எல்லா கருத்துகளும் உள்ளன.' - கே.பாலகிருஷ்ணன்.

மதுரை: ``திருக்குறளை ஆன்மிக நூல் எனச் சுருக்குவது சரியில்லை" - கே.பாலகிருஷ்ணன்

`திருக்குறளை ஆளுநர் முழுமையாகப் படித்தால் தெரியும். எல்லா மக்களுக்குமான புனிதநூலான திருக்குறளில் ஆன்மிகக் கருத்துகள் மட்டுமல்ல, எல்லா கருத்துகளும் உள்ளன.' - கே.பாலகிருஷ்ணன்.

Published:Updated:
மதுரை நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன்

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சி.பி.எம் ஏற்பாடு செய்திருந்த 73-வது குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த விழாவில் சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.

வாலிபர் சங்கத் தலைவர்கள் ஊர்வலம்
வாலிபர் சங்கத் தலைவர்கள் ஊர்வலம்

சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தமிழகத் தலைவர்களின் வேடங்களை அணிந்த மாணவர்களின் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களை மறுதலிக்கிற வகையிலும், இந்திய அரசியல் சாசனம் மற்றும் தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றை மாற்றத் துடிக்கும் அவர்களின் முயற்சிகளைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணையும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

மதுரை நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன்
மதுரை நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் மோசமான போக்கைக் கண்டித்து மக்கள் குரலெழுப்ப வேண்டும்" என்றார்.

அதைத் தொடர்ந்து, அவரிடம் `திருக்குறள் ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்' என ஆளுநர் குடியரசு தின வாழ்த்துச்செய்தி வெளியிட்டிருப்பது பற்றிச் செய்தியாளர்கள் கேட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு, ``திருக்குறளை ஆளுநர் முழுமையாகப் படித்தால் தெரியும். எல்லா மக்களுக்குமான புனிதநூலான திருக்குறளில் ஆன்மிகக் கருத்துகள் மட்டுமல்ல, எல்லா கருத்துகளும் உள்ளன என்று. `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்பது ஆன்மிக கருத்தா? அதையும் தாண்டி சமூகநீதி, சமூக ஒடுக்குமுறை உள்ளிட்ட சமூகம் சார்ந்த கருத்துகளை எடுத்துச்சொல்லும் நூலாகத் திருக்குறள் இருக்கிறது" என்றார்.

மதுரை நிகழ்ச்சி
மதுரை நிகழ்ச்சி

தொடர்ந்து, தஞ்சை மாணவி மரண விவகாரத்தில் பாஜக-வின் தொடர் போராட்டம் குறித்த கேள்விக்கு,

``இல்லாத ஒன்றை, இட்டுக்கட்டிச் சொல்லி மதவெறி அரசியலைப் பரப்ப நினைக்கும் பா.ஜ.க-வின் செயல் பலிக்காது. மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்தில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்ற நிலையில், பா.ஜ.க இதில் படுதோல்வி அடையும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism