Published:Updated:

பா.ஜ.க பற்றவைத்த மது ஆலை நெருப்பு... ஆட்டம் காணும் ரங்கசாமி ஆட்சி!

ரங்கசாமி - கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்கசாமி - கல்யாணசுந்தரம்

மதுபான ஆலைகளுக்கும் இ டெண்டர் வேண்டும் என்று கேட்கிறோம். அப்படி வைக்கவில்லையென்றால் பிரதமரிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் முறையிடுவோம்.

பா.ஜ.க பற்றவைத்த மது ஆலை நெருப்பு... ஆட்டம் காணும் ரங்கசாமி ஆட்சி!

மதுபான ஆலைகளுக்கும் இ டெண்டர் வேண்டும் என்று கேட்கிறோம். அப்படி வைக்கவில்லையென்றால் பிரதமரிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் முறையிடுவோம்.

Published:Updated:
ரங்கசாமி - கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்கசாமி - கல்யாணசுந்தரம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறது புதுச்சேரி அரசு. இந்த அனுமதி விவகாரத்தில், கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் சட்டப்பேரவையிலேயே புகார் கூற, கடும் அப்செட்டில் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கே குண்டு வைக்கிற குற்றச்சாட்டைக் கூறியிருக்கும் கல்யாணசுந்தரத்திடம் பேசினோம். “நடப்பது பா.ஜ.க கூட்டணி அரசு. அதனால் இவர்கள் எந்தத் தவறு செய்தாலும் அது பா.ஜ.க-வையும்தான் பாதிக்கும். எந்த லாபத்தையும் அனுபவிக்காமல், நாங்கள் ஏன் கெட்ட பெயர் வாங்க வேண்டும்... ஒரு மதுபான ஆலை அனுமதிக்கு 15 கோடி ரூபாய் என்ற அளவில், 90 கோடி ரூபாய் வரையிலும் கைமாறியிருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். மேலும் நான்கு நிறுவனங்களுக்கு அனுமதி தர ஏற்பாடு நடப்பதாகவும் சொல்கிறார்கள்.

ரங்கசாமி
ரங்கசாமி

கடந்த ஆட்சியில், ரவிக்குமார் மதுபான தொழிற்சாலை ரூ.264 கோடியும், பிரீமியர் மதுபான தொழிற்சாலை ரூ.454 கோடியும் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக முன்னாள் கவர்னர் கிரண் பேடியால் சீல் வைக்கப்பட்டன. அந்த நிறுவனங்களிடம் எந்த அபராதமும் வசூலிக்காமல் இப்போது அனுமதி கொடுத்தது எப்படி?

வாகன ஃபேன்ஸி எண்களுக்குக்கூட இ டெண்டர் வைக்கிற புதுச்சேரியில், அரசுக்குப் பல கோடி வருவாய் வர வாய்ப்பிருக்கும் மதுபான ஆலை அனுமதியை மட்டும் ஏன் நேரடியாக வழங்குகிறார்கள்... மதுபான ஆலைகளுக்கும் இ டெண்டர் வேண்டும் என்று கேட்கிறோம். அப்படி வைக்கவில்லையென்றால் பிரதமரிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் முறையிடுவோம். அப்படியும் தீர்வு கிடைக்கவில்லையென்றால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம். இ டெண்டர் வைக்காத கலால்துறை இயக்குநர் சுதாகர், செயலர் வல்லவன் ஆகியோர் மீது சி.பி.ஐ விசாரணை கேட்டும் போராடுவோம்” என்றார் கிடுக்கிப்பிடியாக.

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

இதுகுறித்து விளக்கம் கேட்க கலால்துறை செயலரும், மாவட்ட ஆட்சியருமான வல்லவனைத் தொடர்புகொண்ட போது, “இன்னும் யாருக்கும் லைசென்ஸ் கொடுக்கவில்லை. மேலும் போட்டி இருந்தால்தான் டெண்டர் வைக்க வேண்டும். கடந்த காலங்களிலும் லைசென்ஸுகளுக்கு டெண்டர் வைத்தது கிடையாது. அரசின் கொள்கை முடிவு குறித்து நான் பேச முடியாது. ஏற்கெனவே யார் அந்தத் தொழிலில் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வழங்க முடியும். அனைவருக்கும் லைசென்ஸ் வழங்கிவிட முடியுமா?” என்றார்.

எது எப்படியோ... மாநிலங்கள்தோறும் கூட்டணிக் கட்சி களுக்கு குடைச்சல் கொடுத்துவரும் பா.ஜ.க., புதுச்சேரியிலும் தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்!