கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்க ளுக்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் களத்தில் சுழல்கின்றன. ‘கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்ற வேண்டும்’ என்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் குரல் கொடுக்கிறார்கள். ‘ஒன்றிணைவோம் வா’ என்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதற்கு நடுவே, இந்த இரு கட்சியிலிருக்கும் பல முக்கியத் தலைகள் மாவட்டம்தோறும் ‘களத்தில் கலக்குவோம் வா... ஒன்றிணைவோம் வா...’ என்று கூட்டுப் போட்டுக்கொண்டு கள்ளத்தனமான பல்வேறு தகிடு தத்தங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பது கொரோனாவினும் கொடிது!

மணல் கடத்தல், மரம் வெட்டுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், டாஸ்மாக் சரக்குகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் உட்பட எதில் எதிலெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அதிலெல்லாம் கூட்டணி போட்டுக் கலக்கிவருகிறார்கள். சிக்கிய இடங்களிலெல்லாம் ஊழல் சிக்ஸர்களை அடித்து, கோடிக்கணக்கில் பணம் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள் இந்த இரு கழகங்களின் கண்மணிகள் பலரும். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக கதர், காவி தொடங்கி அனைத்துக் கட்சியினருக்கும், அந்தந்தப் பகுதிக்கும் தொழிலுக்கும் ஏற்றவாறு ‘கட்டிங்’ கொடுக்கப்படுகிறது. வழக்கம் போல அதிகாரிகளின் பாக்கெட்டுகளும் நிரப்பப்படுவதால், அத்தனை தகிடுதத்தங்களுக்கும் சிறப்பான பாதுகாப்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது!

உதாரணமாக, இந்த ஊரடங்கு காலகட்டத்தைப் பயன்படுத்தி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் சரக்குகளைக் கள்ளத்தனமாக விற்பனை செய்தே மேற்கொண்டும் பல கோடிகளைச் சேர்த்திருக்கிறார்கள் கழகங்களின் புள்ளிகள் பலரும். இதன் மூலமாகப் புதிதாகக் கோடீஸ்வரர் ஆனவர்களும் உண்டு. மார்ச் 24 அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட மறுநொடியில் ஆரம்பித்த இந்தக் கள்ளச்சந்தை, தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமே! அதாவது, சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க இன்றுவரையிலும் அனுமதி தரப்படவில்லை. அதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சென்னையை ஒட்டியுள்ள பல பகுதிகளிலும் (சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள்) டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதையும்கூட தங்களுக்குச் சாதகமான அம்சமாக மாற்றிக்கொண்டுவிட்டது இந்தக் கள்ளச்சந்தைக் கும்பல். அங்கெல்லாமும் கள்ளச்சந்தைச் சரக்குகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

‘‘ `ஊரடங்கு வரவிருக்கிறது’ என்ற அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, அதாவது மார்ச் 20-ம் தேதியிலிருந்தே டாஸ்மாக் சரக்குகளை பெட்டி பெட்டியாக வாங்கிப் பதுக்கிவைக்க ஆரம்பித்த இவர்கள், போலீஸ் மற்றும் கலால்துறையினரின் உதவியுடன் இன்றளவிலும் நடத்திக்கொண்டிருக்கும் கள்ளச்சந்தைக் கதைகள் சொல்லி மாளாது’’ என்கின்றனர் திருப்போரூர் வாசிகள் சிலர்.

சரி, ஊரடங்கு காலத்தில் எப்படிக் கொள்ளையடித்து இந்தக் கும்பல்? பார்ப்போம்.

இது குறித்து அதே கழகங்களின் கண்மணிகள் நம்மிடம் நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

‘‘மார்ச் 22-ம் தேதி திருப்போரூரில் பார் நடத்திவரும் மூன்றெழுத்து அரசியல் புள்ளியின் இரண்டு மகன்களும், தாங்கள் பார் நடத்திவரும் டாஸ்மாக் கடைகளிலிருந்து பெரும்பாலான சரக்குகளை வாங்கிப் பதுக்கிவிட்டனர். கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றிலிருக்கும் எலைட் டாஸ்மாக் கடைகளிலிருந்தும் 90 சதவிகித சரக்குகளைக் கைப்பற்றி பதுக்கிவிட்டனர். இது போதாதென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24-ம் தேதி அன்று, ஐந்து வாகனங்களில் ஒவ்வொரு கடையாகப் புகுந்து புறப்பட்ட சுமார் 30 பேர் கொண்ட கும்பல், மொத்தக் கடைகளையும் சில மணி நேரத்தில் காலி செய்தன. சில இடங்களில் காவல்துறை ரோந்து வாகனங்களே இவர்களுடைய வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய கொடுமையும் நடந்தது’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் கோவளம் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர்.

மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த கட்சியினர் சிலர் நம்மிடம், ‘‘மாமல்ல புரத்தில் உணவுசார்ந்த தொழிலில் ஈடுபட்டுவரும் அ.தி.மு.க புள்ளி ஒருவரும், முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு விசுவாசமானவர் என்பதுபோலத் தன்னைக் காட்டிக்கொள்ளும் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க புள்ளி ஒருவரும் இந்த விஷயத்தில் படு ஒற்றுமையாகச் செயல்பட்டார்கள். ஈஞ்சம்பாக்கம் தொடங்கி மரக்காணம் வரையிலான கிழக்குக் கடற்கரைச்சாலை மற்றும் பெருங்குடி தொடங்கி பூஞ்சேரி வரையிலான பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இரண்டு சாலைகளிலும் இருக்கும் தனியார் ரிசார்ட்களில் இருந்த மொத்த சரக்குகளையும் இவர்கள் கைப்பற்றிவிட் டார்கள். ஊரடங்கு காரணமாக ரிசார்ட்கள் மூடப்பட்டுவிட்டதால், ரிசார்ட் உரிமையாளர்கள் கிடைத்த வரை லாபம் என்று இந்த கும்பலிடம் சரக்குகளை விற்றுவிட்டார்கள்’’ என்றவர்கள், அடுத்தடுத்த பகீர் சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

‘‘ஜெகஜ்ஜால கில்லாடியான ஓர் அரசியல்வாதியின் மதுபான ஆலையி லிருந்து, ஊரடங்கு நேரத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், இந்தக் கள்ள மார்க்கெட் கும்பல் மூலமாக விற்பனை செய்யப் பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு விசுவாசமானவ ராகக் காட்டிக்கொள்ளும் அந்தத் தி.மு.க புள்ளிதான் மதுபானங்களை மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கேளம்பாக்கம், புதுப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்திருக்கிறார்’’ என்றார்கள்.

ஊரடங்கு அறிவித்த அடுத்த நாளே சென்னையிலுள்ள பெரும் பணக்காரர்கள் பலரும் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள தங்களுக்குச் சொந்தமான பண்ணை வீடுகளில் குடியேறினர். இவர்களே கள்ளச்சந்தைக் கும்பலின் முக்கியமான இலக்கு. சுமார் 800 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை 5,000 ரூபாய்வரை விற்பனை செய்திருக்கிறது இந்தக் கும்பல்.

நிவாரணப் பொருள்கள், மளிகைப் பொருள்கள், காய்கறி... `அத்தியாவசியப் பொருள்கள் அவசரம்’ என்றெல்லாம் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, பொருள்களுடன் மதுபானங்களும் டோர் டெலிவரி செய்யப்பட்டன. நேரடி விற்பனையும் உண்டு. கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்), பழைய மாமல்லபுரம் சாலை (ஓ.எம்.ஆர்), படப்பை, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் நின்றுகொண்டு போன் செய்தால் காரின் எண்ணையும் இடத்தையும் கூறிவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அந்த இடத்துக்குச் சென்றால் கார் நிற்கும். பணத்தைக் கொடுத்துவிட்டு சரக்குடன் வரலாம்.

இந்த விஷயம் தெரிந்த நபர்களை வைத்து வாய்மொழி விளம்பரத்தின் மூலமாகவே சாதித்திருக்கிறது இந்தக் கும்பல். கேளம்பாக்கம் பகுதியில் மூடப்பட்டிருந்த எலெக்ட்ரிக்கல் கடை ஒன்றில்வைத்தும் சரக்குளை விற்றிருக்கிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் பல லட்சங்களைச் சம்பாதித்துவிட்டார்.

இவ்வளவு நடந்தும் காவல்துறையினர் பெரிய அளவில் எங்குமே சரக்குகளைப் பறிமுதல் செய்யவில்லை. காரணம், மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்த ஒவ்வொரு பகுதியின் காவல் நிலையங்களையுமே செழிப்பாக கவனித்துக் கொண்டார்கள் மதுப்பிரியர்களுக்கான ‘சிறப்பு’ சேவகர்கள். நாள் ஒன்றுக்கு ஸ்டேஷனுக்கு இத்தனை பாட்டில்கள்; பிரியாணி என்று காக்கிகளைக் கனிவுடன் அவர்கள் கவனித்துக்கொண்டார்கள். கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகளிலுள்ள காவல்நிலையங் களுக்கு வாரம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் வழங்கப்பட்டிருக் கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக காவல் துறையினரில் சிலருமே இந்த மது விற்பனையில் நேரடியாகக் கொழித்தார்கள் என்பது கூடுதல் தகவல்!