Published:Updated:

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி எப்படி நடக்கிறது? - லைவ் ரிப்போர்ட்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது, தி.மு.க ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் தீர்வு. இதுதான் அந்தக் கூட்டத்துக்கான மையக்கரு. என்ன நடக்கிறது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில்?

சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். `வெற்றிநடை போடும் தமிழகம்...’ என்று அ.தி.மு.க-வினரும், `ஸ்டாலின்தான் வாராரு...’ என்று தி.மு.க-வினரும் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகின்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க-வை நிராகரிப்போம் மக்கள் கிராமசபை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
மதுரை: அனுமதி கேட்ட அழகிரி... முந்திய தி.மு.க! -கருணாநிதி சிலையைத் திறந்துவைத்த ஸ்டாலின்

அடுத்தகட்டமாக, `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சென்று மக்கள் பிரச்னையைக் கேட்டுவருகிறார். மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது, தி.மு.க ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் தீர்வு. இதுதான் அந்தக் கூட்டத்துக்கான மையக்கரு.

இந்தநிலையில், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்காக, ஸ்டாலின் கோவை வந்திருக்கிறார். கோவை கொடிசியா மைதானம் அருகே நிகழ்ச்சி நடந்தது. இதற்காக காலை 8 மணி முதலே கோவை சிட்டி முழுவதிலுமிருந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் அழைத்துவரப்பட்டனர். நுழைவு வாயிலில் நுழைந்ததும், ஏராளமான தி.மு.க-வினர் வரிசையாக அமர்ந்து மக்களின் புகார்களை விண்ணப்பமாக பெற்றுக்கொள்கின்றனர்.

அதில் மக்களின் பெயர், முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. புகார் மனுவுக்கு கொடுக்கப்படும் அக்னாலெஜ்மென்ட் இருந்தால்தான் உள்ளே அனுமதி.

இதையடுத்து, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தவுடன் சானிடைஸர் கொடுத்து மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். முன் பகுதியில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற செல்ஃபி கார்னர், ஸ்டாலின் கட் அவுட்கள், ஜல்லிக்கட்டு தொடர்பான கட்அவுட் வைக்கப்பட்டிருந்தன. அங்கு மக்கள் ஜாலியாக செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.

ஸ்டாலின் கட்அவுட்
ஸ்டாலின் கட்அவுட்

அதை ஊடகத்தினரும் போட்டோ எடுக்க, அவசர அவசரமாக வந்த ஐபேக் டீம், ஸ்டாலின் கட்அவுட்களுக்கு பச்சை துண்டு அணிவிக்கச் செய்தனர். ஆனால், ஓரத்தில் ஒரு ஸ்டாலின் கட்அவுட் தலையில் அடித்துக்கொள்வது போன்ற போஸில் சாய்ந்திருந்ததை, ஐ-பேக் டீமோ, தி.மு.க-வினரோ கண்டுகொள்ளவில்லை.

ஐபேக் டீமைச் சேர்ந்தவர்கள் கறுப்பு வண்ணத்தில் உடை அணிந்திருந்தனர். அந்த டீ-ஷர்ட்டின் முன் பகுதியில்,`ஹிந்தி தெரியாது’ என்ற வாசகமும், பின் பகுதியில் `TN DESERVES BETTER’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தன. இதை போட்டோ எடுக்கலாம் என்று முயன்றபோது, ஐபேக் டீமைச் சேர்ந்த ஒருவர் நம் கேமராவில் விழுந்துவிடக் கூடாது என்று சிட்டாகப் பறந்துவிட்டார்.

ஐபேக் டீம்
ஐபேக் டீம்

இதையெல்லாம் கடந்து நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்கு சென்றோம். அங்கு, தி.மு.க., அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் புகழ் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டுவந்தன. 10:30 மணிக்கு ஸ்டாலின் மேடைக்கு வந்தார். அவர் வரும்போது, `ஸ்டாலின்தான் வாராரு...’ பாடல் ஒலித்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேடை ஏறியவர், உடனே இறங்கி மக்கள் மத்தியில் சென்றுவிட்டார். குழந்தைகளைக் கொஞ்சுவது, பெரியவர்களை நலம் விசாரிப்பது, செல்ஃபி எடுப்பது என்று 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் மேடை ஏறினார்.

இதையடுத்து, `எருமைசாணி’ யூடியூப் சேனல் புகழ் விஜய், கோவையில் இலவசமாக பிரியாணி வழங்கும் ஷஃப்ரினா என்ற பெண், விளையாட்டு மற்றும் வித்தியாசமான சாதனைகளால் டிரெண்டானவர்களைப் பாராட்டி சால்வை போட்டு ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். கோவை பிரச்னைகள் தொடர்பான குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த இரண்டு மாவட்ட பொறுப்பாளர்களையும் பாராட்டிவிட்டு, ``உங்க எல்லாரையும் பேசவைக்கறது முடியாத காரியம். அதனால, 10 பேர் மட்டும் உங்க கோரிக்கைகளைச் சொல்லுங்க. ஆளுக்கு 2-3 நிமிஷம்தான். 5 நிமிஷம் எடுத்துக்கிட்டா, மொத்தம் 5 பேருக்குத்தான் பேச அனுமதி கொடுப்போம்" என்றார் ஸ்டாலின்.

மதுரை: அனுமதி கேட்ட அழகிரி... முந்திய தி.மு.க! -கருணாநிதி சிலையைத் திறந்துவைத்த ஸ்டாலின்

ஸ்டாலின் ஒவ்வொரு பெயராக வாசிக்க, சில நிமிடங்களிலேயே மைக் அவர்களிடம் சென்றது. ஏற்கெனவே பேப்பரில் எழுதி வைத்ததை சிலர் படிக்க, இன்னும் சிலரோ புகார் சொல்ல மறந்து தி.மு.க மற்றும் ஸ்டாலின் புகழைத்தான் பாடினர். ஸ்டாலினும், ஏற்கெனவே எழுதிவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தார். அனைவரும் பேசி முடித்ததும்,

``உங்க கையில கொடுத்துருக்குற கார்டையெல்லாம் பத்திரமா வெச்சுக்கோங்க. நாங்க பதவிப் பிரமாணம் எடுத்து 100 நாள்ல இதுக்கு தீர்வு கிடைக்காட்டி, இந்த அட்டையைக் காண்பிச்சு நீங்க கோட்டையில இருக்கற முதல்வர் அறைக்குக்கூட வரலாம். அதுல பதிவு எண்ணும் இருக்கு" என்றார்.

பிறகு, மக்களின் மனுக்களைப் பெட்டியில் பூட்டி அதற்கு சீல் வைத்தனர். மீண்டும் மைக் பிடித்த ஸ்டாலின், ``கொங்கு மண்டலம் அ.தி.மு.க கோட்டை என்று சொல்லிக்கொள்கின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அந்தக் கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டது. இந்தத் தேர்தலில் அதைக் குழிதோண்டி புதைப்போம். கோவையில் அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகள் மாநகராட்சியில் பல ஊழல்களைச் செய்திருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

வேலுமணியின் அண்ணன் அன்பரசன்தான் நிழல் அமைச்சராக வலம்வருகிறார். வேலுமணி என்ன கோவையைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறாரா? விரைவில், ஆட்சி மாறும். அப்போது காட்சியும் மாறும். தி.மு.க ஆட்சியமைந்தவுடன் வேலுமணி மீது ஊழல் வழக்கு பாயும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு