Published:Updated:

'தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை தமிழக அரசு வழங்காது!'- முதல்வர் ஸ்டாலின்.#NowAtVikatan

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

live news updates - 13/06/2021

13 Jun 2021 6 PM

கண்ணை இமை காப்பது போல காவிரிப்படுகையைக் காப்போம்!

ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையில் உள்ள 75 இடங்களில் தமிடிகத்தின் புதுக்கோட்டை- வடதெரு சேர்க்கப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறிக்கை
அறிக்கை
அறிக்கை
அறிக்கை

இதனையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறி்க்கையில், "ஒன்றிய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையில் புதுக்கோட்டை- வடதெரு சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எந்தப்பகுதியிலும் இத்திட்டம் கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கை. இதனை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். கண்ணை இமை காப்பது போல காவிரிப்படுகையைக் காப்போம்!" எனக் கூறிள்ளார்.

13 Jun 2021 8 AM

அண்ணா பல்கலைக்கழகத்தில் விருப்ப பாடமாக தமிழ் இடம்பெறும்!- அமைச்சர் பொன்முடி.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``9-ம் வகுப்பு மதி்ப்பெண் அடிப்படையில் அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை நடக்கும். 11-ம் வகுப்பு சேர்க்கைக்கும் 9-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அண்ணாமலை பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 9-வது விருப்ப பாடமாக தமிழ் இடம்பெறும்’’ என்றார்,

அடுத்த கட்டுரைக்கு