Published:Updated:

`` நீரடித்து நீர் விலகாது; நமக்குத் தேவை ஒற்றுமைதான்" - எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா பேச்சு

அதிமுக பொன்விழா நிகழ்ச்சிகள் குறித்த தொடர் செய்திகள்

17 Oct 2021 1 PM

எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா

சசிகலா
சசிகலா
`` நீரடித்து நீர் விலகாது; நமக்குத் தேவை ஒற்றுமைதான்" - எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா பேச்சு

இன்று அதிமுகவின் பொன் விழாவையொட்டி, ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்துக்குச் சென்ற சசிகலா அங்கு அவரது ஆதரவாளர்களுக்குமுன் உரையாற்றியிருக்கிறார். `` அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டும். அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும். நாம் ஒன்றாக இருக்கவேண்டும். அதிமுக வென்றாக வேண்டும் எனப் பேசி இருக்கிறார் மேலும், ``நமக்குத் தேவை ஒற்றுமைதான் நீரடித்து நீர் விலகாது. என்னால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோதுகூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுதான் சென்றேன்" என சென்னை ராமாபுரத்தில் சசிகலா பேசியிருக்கிறார்.

17 Oct 2021 10 AM

எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியேற்றினார் சசிகலா; 'பொதுச் செயலாளர்' என கல்வெட்டு!

கல்வெட்டு
கல்வெட்டு
சசிகலா
சசிகலா

நேற்றைய தினம் சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதிமுக கொடி கட்டிய காரிலேயே சசிகலா மெரினா சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தின் முன் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். நீண்ட நேரம் இரு கைகளை கூப்பி நின்றவர், மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ``4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தினை அம்மா நினைவிடத்தில் இறக்கி வைத்திவிட்டேன். அம்மாவும், தலைவரும் நிச்சயம் அதிமுகவையும் அதன் தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள்” என்றார். அதன் தொடர்ச்சியாக இன்று அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை தி-நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார் சசிகலா. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் என கல்வெட்டும் திறக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு