Election bannerElection banner
Published:Updated:

மதுரை: `வடமாவட்டங்களில் வி.சி.க-வினர் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டனர்!’ - எல்.முருகன்

அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்த எல்.முருகன்
அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்த எல்.முருகன்

``அரக்கோணத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இதை தி.மு.க-வும், வி.சி.க-வும் சாதிய பிரச்னையாக மாற்ற முயல்கின்றனர்” - எல்.முருகன்

``அரக்கோணத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இதனை பயன்படுத்தி தி.மு.க, வி.சி.க சாதிய பிரச்னையாக மாற்ற முயல்கின்றனர்" என்று மதுரை வந்திருந்த பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

எல்.முருகன்
எல்.முருகன்

கட்ந்த 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று மதுரை அவுட் போஸ்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மாலையிட்டு மரியாதை செய்தார். அதன் பின்பு மாலையிட வந்த மதுரை மாவட்ட பா.ஜ.க-வினர் வி.சி.க-வினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

இதனால் அங்கு இரண்டு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. சிலர் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் பா.ஜ.க-வினர் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வி.சி.க-வினர் 50 பேர் மீதும், பா.ஜ.க-வினர் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த எல்.முருகன்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த எல்.முருகன்

இந்த தகவல் பா.ஜ.க மாநில தலைமைக்கு தெரிவிக்கப்பட, 'அம்பேத்கர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் சிலைக்கு மாலையிட நானே வருவேன். என்னை தடுத்து பாருங்கள்' என்று அறிவித்த எல்.முருகன், இன்று அதற்காகவே மதுரை வந்தார்.

அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மதுரை மாநகர வி.சி.க-வினர் அறிவிக்க மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதனால், அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலை அமைந்திருக்கும் இடத்தை சுற்றி அதிகமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

போலிஸ் பாதுகாப்புடன் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டவர், 14-ம் தேதி நடந்த சம்பவத்தை கண்டித்து அங்கு நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டார். பின்பு பேசிய எல்.முருகன், "திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும். எங்களைத் தவிர வேறு யாருக்கும் அம்பேத்கருக்கு பெருமை தரக்கூடிய உரிமை கிடையாது.

அம்பேத்கர் பிறந்தநாளை எங்களது ஆட்சியில் பொதுவிடுமுறை என அளித்துள்ளோம். பொருளாதார மேதையான அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பீம் மொபைல் ஆப் அறிமுகம் செய்தோம். அம்பேத்கரின் புகழை எடுத்து செல்வதில் பா.ஜ.க-வினருக்கு நிகர் யாருமில்லை. அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது பா.ஜ.க ஆட்சியில்தான்.

கட்சி நிர்வாகிகளுடன் எல்.முருகன்
கட்சி நிர்வாகிகளுடன் எல்.முருகன்

மதுரையில் பா.ஜ.க-வினர் மீது திட்டமிட்டு வி.சி.க-வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும். வட மாவட்டங்களில் வி.சி.க-வினர் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டனர். இதனால் வி.சி.க-வினர் பா.ஜ.க-வில் இணைந்து வருகின்றனர்.

அரக்கோணத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இதை தி.மு.க-வும், வி.சி.க-வும் சாதிய பிரச்னையாக மாற்ற முயல்கின்றனர். வி.சி.க மீதான கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும்

பா.ஜ.க-வினர் அமைதியானவர்கள். அதனால்தான் அன்று அடிக்கும்போதுகூட அமைதியாக இருந்தார்கள். திருமாவளவன் தன் கட்சியினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். மதுரையில் நடைபெற்ற பிரச்னையை திருமாவளவன்தான் தூண்டிவிட்டிருக்கிறார்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு