Published:Updated:

திமுக பிரமுகர்மீது தாக்குதல்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று, திமுக பிரமுகர் ஒருவரைச் சட்டையைக் கழற்றி இழுத்துச் சென்ற சம்பவத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ளவாக்கு செலுத்தவந்ததாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரைச் சுற்றிவளைத்தனர். இந்தத் தகவலறிந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த நபரிடம் வாக்குவாதம் செய்தார். தேர்தல் நேரத்தில், ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர், திமுக பிரமுகரை, அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 ஜெயக்குமார்
ஜெயக்குமார்

பின்னர் அதிமுக-வினர் அந்த நபரைத் தாறுமாறாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர்மீது சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!