Published:Updated:

``நம்பிக்கையின் சின்னமாக தாமரை... சாதி அரசியல் செய்தவர்களுக்கு பதிலடி" - முலாயம் சிங் யாதவ் மருமகள்

அபர்ணா யாதவ்

`இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைத்து தரப்பிலும் பா.ஜ.க-வினர் உள்ளனர் என்ற பதில் இந்த தேர்தல் முடிவில் கிடைத்திருக்கிறது.' - அபர்ணா யாதவ்

உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும், மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. சமீபத்தில் முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜ.க-வில் இணைந்தார். தேர்தல் நேரத்தில் அவர் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

இந்த நிலையில், முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜ.க-வின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், `` இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைத்து தரப்பிலும் பா.ஜ.க-வினர் உள்ளனர் என்ற பதில் இந்த தேர்தல் முடிவில் கிடைத்திருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் நம்பிக்கையின் சின்னமாக தாமரை உருவெடுத்திருக்கிறது. சாதி அரசியல் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன், மார்ச் 10-ல் நாங்கள் ஆட்சியமைக்கவிருக்கிறோம்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism