Published:Updated:

`மேட் இன் தமிழ்நாடு’ : ஸ்டாலினின் ஆசையும், அரசியல் பின்னணியும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏற்றுமதி மாநாடு
ஏற்றுமதி மாநாடு ( காளிமுத்து )

`` `மேட் இன் இந்தியா’போல `மேட் இன் தமிழ்நாடு’ என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது, எங்கள் ஆசை மட்டுமல்ல, லட்சியமும்கூட” என்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

75-வது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் 20.09.21 முதல் 26.09.21 வரை `வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, 22.09.21 புதன்கிழமையன்று சென்னை கலைவாணர் அரங்கில், `ஏற்றுமதியில் ஏற்றம், முன்னணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே இருந்தது இல்லை. அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாகத்தான் இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்திருக்கிறது. நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

ஏற்றுமதி மாநாடு
ஏற்றுமதி மாநாடு
காளிமுத்து

இந்திய அளவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக விளங்கிவருகிறது. இந்தநிலையில், 2020 - 21-ம் ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்கு 8.97% ஆகும். பெரும்பாலான பொருள்கள் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இதை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் `மேட் இன் இந்தியா’போல `மேட் இன் தமிழ்நாடு’ என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது, எங்கள் ஆசை மட்டுமல்ல, லட்சியமும்கூட. அந்த லட்சியத்தை நோக்கியே எங்கள் பயணம் அமைந்திடும். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு அடைந்திட வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

ஏற்றுமதி மாநாட்டில் நடந்த நிறுவனங்களின் ஸ்டால்கள்
ஏற்றுமதி மாநாட்டில் நடந்த நிறுவனங்களின் ஸ்டால்கள்
காளிமுத்து

இந்த மாநாட்டில், 2,120.54 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கின்றன.

முதல்வர் ஸ்டாலின் பேசிய `மேட் இன் தமிழ்நாடு’ என்பதற்கான அரசியல் பின்னணி குறித்து தி.மு.க சீனியர் ஒருவரிடம் பேசினோம். ``குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அத்தனை வயதினருக்குமான பொருள்களை எடுத்துப் பார்த்தால் இந்தியாவில் பெரும்பான்மைப் பொருள்கள் `மேட் இன் சைனா’ என்றே பதிந்திருக்கும். `சாம்சங்’ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பொருள்களில் `மேட் இன் ஜப்பான்’ என்றிருக்கும். நூறில் 10 சதவிகிதப் பொருள்களில்தான் `மேட் இன் இந்தியா’ என்று பதியப்பட்டிருக்கும்.

மேக் இன் இந்தியா - மோடி
மேக் இன் இந்தியா - மோடி

இதை உடைத்து, அனைத்துவிதமான தயாரிப்புகளையும் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் `மேக் இன் இந்தியா’ என்கிற திட்டத்தைத் தொடங்கினார்கள். அது தொடங்கப்பட்டதோடு சரி, அந்தத் திட்டத்தின் கீழ் என்னென்ன உற்பத்தி செய்யப்பட்டன என்பதற்கான தரவுகளே இல்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள `மேட் இன் தமிழ்நாடு’ திட்டம் அதற்கு செக் வைக்கும் வேலைதான். மோடி `மேக்’ என்றுதான் சொன்னார், ஆனால் ஸ்டாலினோ `மேட்’ என்று சொல்லியிருக்கிறார். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. `நீங்கள் சொன்னதோடு சரி, செய்ததாகத் தெரியவில்லை. நாங்கள் செய்வதையே சொல்கிறோம்’ என்ற அர்த்தத்தில் அரசியல்ரீதியிலான மோதல் போக்குதான் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஏ.கே.47 துப்பாக்கிக்கு இணையான திருச்சி அசால்ட் ரைபிள்' - மேக் இன் இந்தியா திட்டத்தால் சாத்தியம்

ஏற்கெனவே ஒன்றிய அரசு என்று சொல்லி மத்திய பாஜக அரசை வெறுப்பேற்றிவரும் ஸ்டாலின், தற்போது `மேக் இன் இந்தியா’வுக்குப் போட்டியாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி மேலும் ஆத்திரமூட்டியிருக்கிறார். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே, தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் `மேட் இன் தமிழ்நாடு’ என்று பொருள்களில் இடம்பெறப்போவதில்லை. அதற்கான சாத்தியமும் இல்லை. இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகம், இந்திய அரசை மீறி எதையும் செய்ய முடியாது. எனினும், ஏற்றுமதியில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்த மற்றும் தமிழகத்துக்குப் பின்னால் இருக்கிற எந்த ஒரு மாநிலமும் யோசித்துக்கூடப் பார்க்காத ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற தேடல்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

ஏற்றுமதி
ஏற்றுமதி

நாட்டிலேயே ஏற்றுமதியில் முதலிடத்தைப் பிடிக்க காய்நகர்த்தும் வகையில்தான் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி தமிழகத்தைப் பின்பற்றி பாஜக-வுக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறது” என்றார்.

கனெக்ட்டிவிட்டி, ஆஃப் ரோடு, மேக் இன் இந்தியா, கொரோனா... டெய்ம்லர் இந்தியா கண்ட சவால்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு