Published:Updated:

`கட்சி கொள்கைக்கு முரணாக கருத்து!’ - மதன் ரவிச்சந்திரன் பாஜக-விலிருந்து நீக்கம்!

கமலாலயம்
கமலாலயம்

ரவிச்சந்திரன், வெண்பா இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்குவதாக தமிழக பாஜக-வின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

பாஜக-வின் கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ பதிவை நேற்றைய தினம் தனது யூடியூப் சேனலில் வெளியட்டிருந்தார் மதன் ரவிச்சந்திரன். அந்த வீடியோவில் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரும் ராகவன் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்தநிலையில் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக தமிழக பாஜக-வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

கே.டி ராகவன் வீடியோ விவகாரம்: `யூ-டியூபர் என்னை சந்தித்து பேசியது உண்மைதான்!’ - அண்ணாமலை சொல்வதென்ன?
தமிழக பாஜக
தமிழக பாஜக

அந்த அறிக்கையில், `பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களைச் சந்தித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள மதன், வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு