Published:Updated:

``சாதி வித்தியாசம் பார்க்காமல், தீட்டு பார்க்காமல் புரட்சி செய்த மடம் இது" - மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்

``சோழவந்தான் பக்கத்துல ஒரு கிராமக் கோயில் விழாவுக்கு கூப்பிட்டாங்க. அங்க கார் போகாத பாதையில் 4 கிலோமீட்டர் வேர்க்க விறுவிறுக்க நடந்தே போயி கலந்துக்கிட்டேன். மக்கள் அன்புதான் எனக்கு முக்கியம்.” - மதுரை ஆதீனம்

``சாதி வித்தியாசம் பார்க்காமல், தீட்டு பார்க்காமல் புரட்சி செய்த மடம் இது" - மதுரை ஆதீனம்

``சோழவந்தான் பக்கத்துல ஒரு கிராமக் கோயில் விழாவுக்கு கூப்பிட்டாங்க. அங்க கார் போகாத பாதையில் 4 கிலோமீட்டர் வேர்க்க விறுவிறுக்க நடந்தே போயி கலந்துக்கிட்டேன். மக்கள் அன்புதான் எனக்கு முக்கியம்.” - மதுரை ஆதீனம்

Published:Updated:
மதுரை ஆதீனம்

அதிரடியாகப் பல்வேறு கருத்துகளைப் பேசிவரும் மதுரை ஆதீனத்தை எதிர்த்து திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினரையும், பெரியாரிஸ்ட்டுகளையும் தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்களும்கூட எதிர்த்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

ஆதீனத்துக்கு ஆதரவாக பா.ஜ.க., இந்து மக்கள் கட்சியினரும் பேசிவரும் பரபரப்பான சூழலில் மதுரை ஆதீனத்தைச் சந்தித்து நமது கேள்விகளை முன்வைத்தோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``உங்களைப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்துவருகிறார்களே?"

"தமிழ் மொழியை, நம் பண்பாட்டைப் பாதுகாக்க நான் பேசுவதை தவறாகப் புரிந்துகொண்டு விமர்சனம் செய்கிறார்கள். செய்யட்டும், அதைப் பற்றிக் கவலை இல்லை. நான் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவன். காய்த்த மரம்தானே கல்லடிபடும், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நடிகர் விஜய்யைப் பற்றி நீங்கள் பேசியதால் அவர் ரசிகர்களும் தற்போது தங்களை எதிர்க்கிறார்களே?"

``எதிர்க்கட்டும். நான் ஒண்ணும் தவறாப் பேசலையே. சினிமாவில் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துகிறார்கள். பிற மதங்களைக் கிண்டல் செய்து எதிர்ப்பு வந்தால் உடனே மன்னிப்புக் கேட்கிறார்கள். அதைப் பற்றி பேசினால் தவறா... எனக்கு எதிராகப் பேசட்டும்.”

"மறைந்த ஆதீனம் அருணகிரிநாதர் இருந்தபோது, அவரை எதிர்த்த இந்து இயக்கங்கள் உங்களை ஆதரிக்க என்ன காரணம்?"

``உன்மையைப் பேசுறதுதான்..."

மதுரை ஆதீனம் பிரதமரைச் சந்தித்தபோது...
மதுரை ஆதீனம் பிரதமரைச் சந்தித்தபோது...

``துறவியான யோகி ஆதித்யநாத் அரசியலுக்கு வந்ததுபோல் நீங்களும் வர ஆசைப்படுகிறீர்கள் என்று விமர்சிக்கிறார்களே?"

"சொல்லட்டும்."

"பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை நீக்கப்பட்டதற்கு மடத்தைவிட்டு வெளியில் வந்து நீங்கள் இனிப்பு வழங்கியதும் விமர்சிக்கப்பட்டதே?"

``மடாதிபதிகள் வெளியில் வருவதில்லை. மக்களோடு இருப்பதில்லை என்று குற்றம் சொன்னார்கள். அதனால்தான் வெளியில் வந்தேன். இப்பவும் மடத்தின் கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறேன். அனைத்து மக்களும் இங்கு வரலாம். நானும் யார் அழைத்தாலும் அவர்களின் நிகழ்ச்சிக்குச் செல்கிறேன். இப்படிச் செய்தாலும் தப்பு என்கிறார்கள்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆதீன மடத்துக்கு நிறைய வருவாய் வந்தும், மக்களுக்கு எந்தச் சேவையும் செய்வதில்லை என்று முன்பு சொல்லப்பட்டது. தாங்கள் வந்த பின்பு மாற்றத்தை செய்திருக்கிறீர்களா?"

``நான் ஆதீனப் பொறுப்புக்கு வந்த பின்பு தேவார பாடசாலை திறந்து மாணவர்களுக்கு சைவத் திருமுறைகளை கற்றுக் கொடுக்கிறோம். தமிழ் மொழியில் முதலாவதாக வரும் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்குகிறோம். நான் முன்பு கன்னியாகுமரி, கரூரில் இருந்தபோது பிள்ளைகளை திருக்குறள் சொல்லச் சொல்வேன். சொல்கிற பிள்ளைக்கு 50 ரூபாய் கொடுப்பேன். இப்போதும் மடத்துக்கு வருகிற பொருள்களை, உதவி கேட்டு வரும் மக்களுக்கு வழங்குகிறேன்.

வெளியில் செல்லும்போது படை பரிவாரங்களோடு செல்வதில்லை. எளிமையாகச் சென்று வருகிறேன். இங்கு பல முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியிருக்கிறேன். மடத்தின் சொத்துகளை மீட்டு வருகிறோம். தமிழில் குடமுழுக்குகளை நடத்திவைக்கிறேன். சைவத் தமிழை வளர்க்க நூல் வெளியிடுகிறோம். தமிழ்த் தொண்டாற்றுகிறவர்களை கௌரவிக்கிறோம். இதையெல்லாம் செய்கிற என்னைத்தான் விமர்சிக்கிறார்கள்."

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

"மடத்துக்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த வழக்குகள் எந்த நிலையில் உள்ளன?"

"அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்வோம்."

"புகழ்பெற்ற சைவ மடத்தில் நீங்கள் பொறுப்பேற்ற பின்பு அதிகமாக சர்ச்சையாக்கப்படுவது ஏன்?"

``அப்பர் சுவாமிகளையே கல்லைக்கட்டி கடலில் போட்டார்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்."

"நீங்கள் பா.ஜ.க ஆதரவு அமைப்பு நடத்திய துறவியர் மாநாட்டில் பேசியது தவறு என்று சில கட்சியினர் சொல்கிறார்களே?"

"அது பா.ஜ.க நடத்திய கூட்டமல்ல. விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தியது. அதில் இந்து மதப் பிரச்னைகளைப் பற்றித்தான் பேச முடியும். அதேநேரம் தி.க-காரர் வீட்டு விசேஷத்திலும் கலந்துகொண்டிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். இவ்வளவு ஏன்... சின்ன வயதில் புளியங்குடி சர்ச் விழாவுக்கு எங்க ஊர்லருந்து நடந்தே போய்ப் பார்த்திருக்கிறேன். நான் அனைத்து விழாக்களிலும் கலந்துகொண்டவன். இதுவரை ஆதீனங்கள் யாரும் செய்யாத வகையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செய்திருக்கிறேன். மருது பாண்டியர் நிகழ்ச்சிக்குச் சென்றேன். திருப்புவனத்தில் துப்பாக்கி கவுண்டர் விழாவில் கலந்துகொண்டிருக்கிறேன்."

"பிரதமர் மோடியைச் சந்தித்தபோது தேவாரம் பாடினீர்களா?"

"பாடினேன்."

"முந்தைய ஆதீனம் திராவிட இயக்கங்களோடு தொடர்பில் இருந்தார். நீங்கள் அப்படி இல்லாததுதான் சர்ச்சையாகிறதா?"

``நானும் திராவிட இயக்கத்தினர் கூப்பிடும் நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். `விடுதலை’ பத்திரிகையை தினமும் படிக்கிறேன்."

"ஆதீனங்கள் அரசியல் பேசக் கூடாது என்று சொல்கிறார்களே?"

``திருஞானசம்பந்தர் `நாமார்க்கும் குடியல்லோம்’ என்றார். சமண மதத்துக்குச் சென்ற கூன் பாண்டியனை சைவ மதத்துக்கு திரும்பக் கொண்டு வந்து நிமிர்ந்த நெடுமாறனாக்கியது இந்த மடம். 7-ம் நூற்றாண்டிலிருந்து அரசர்களைத் திருத்திய பெருமைமிகு மடம் இது. சைவக் கட்சியான திருஞானசம்பந்தர் மதுரைக்கு வரும்போது இங்கே சமணக்கட்சி இருந்தது. மடத்துக்கு நெருப்பெல்லாம் வெச்சாங்க. பல கொடுமைகளைச் செஞ்சாங்க. அதோடதான் பாண்டியனுக்கு வெப்பு நோய் வந்து, பின்பு திருந்தி திருஞானசம்பந்தரால் பாண்டிய நாடு பழம்பதியாக மாறியது. அந்த அளவுக்கு அப்பவே அரசியல் இருந்திருக்கிறது..."

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

"அதே நிலைமைதான் இப்பவும் இருக்குன்னு சொல்றீங்களா?"

"அது எனக்கு தெரியலய்யா."

"ஆதீனங்கள் ஆடம்பரமாக இருப்பதாக விமர்சிக்கிறார்களே?"

``சாதி வித்தியாசம் பார்க்காத, தீட்டு பார்க்காத புரட்சி செய்த மடம் இது. நான் எங்கும் எளிமையாகத்தான் செல்கிறேன். கல்யாணம் காதுகுத்துக்கெல்லாம் நான் வரணும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டுப் போறாங்க. கல்யாணத்துக்குத் தாலி எடுத்து கொடுத்து தமிழ் முறைப்படி நடத்துறேன். சோழவந்தான் பக்கத்துல ஒரு கிராமக் கோயில் விழாவுக்கு கூப்பிட்டாங்க. அங்க கார் போகாத பாதையில் 4 கிலோமீட்டர் வேர்க்க விறுவிறுக்க நடந்தே போயி கலந்துக்கிட்டேன். மக்கள் அன்புதான் எனக்கு முக்கியம். மக்கள் தரும் கூழைக் குடிக்கிறேன்.

எனக்கு மாலை போட விட மாட்டேன். பாத பூஜை செய்ய வந்தால் ஒத்துக்க மாட்டேன். எல்லோருக்கும் விபூதி பூசிவிடுவேன். எந்தப் பாகுபாடும் நான் பார்க்க மாட்டேன். இப்படியெல்லாம் பண்றதுனாலதான் விமர்சிக்கிறாங்களான்னு தெரியலை."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism