Published:Updated:

``குத்தகை தொகை கட்டாத அரசியல்வாதிகள் அடுத்த பிறவியில் வௌவாலாகப் பிறப்பார்கள்!” - மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்

``அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் வரவேற்புக்குரியது” என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

``குத்தகை தொகை கட்டாத அரசியல்வாதிகள் அடுத்த பிறவியில் வௌவாலாகப் பிறப்பார்கள்!” - மதுரை ஆதீனம்

``அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் வரவேற்புக்குரியது” என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
மதுரை ஆதீனம்

``ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளிடம் ஆதீன சொத்துகள் பல சிக்கியுள்ளன. அதற்கான குத்தகைப் பணத்தை முறையாக அவர்கள் செலுத்துவதில்லை. பல இடங்களில், ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர். குத்தகைத் தொகையைக் கட்டாத அரசியல்வாதிகள் அடுத்த பிறவியில் வௌவாலாகப் பிறப்பார்கள்” என கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கோயிலுக்கு வந்த மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கோயிலில் மதுரை ஆதீனம்
கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கோயிலில் மதுரை ஆதீனம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்திலுள்ள கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாதசுவாமி திருக்கோயில் பிரசித்திபெற்ற ஸ்தலமாக இருந்துவருகிறது. இக்கோயில் மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமானது. இத்திருக்கோயிலில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்துவருகிறார், பிரளயம் காத்த விநாயகர். கிளிஞ்சல் மற்றும் நத்தான் கூடு ஆகியவற்றால் ஆன திருமேனிகொண்ட சிறப்புமிக்க பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒரு நாள், அதுவும் ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி நாளின் முதல் நாள் மாலை 6 மணிக்கு தொடங்கி, மறுநாள் விடியற்காலை 6 மணி வரை விடிய விடிய நடைபெறும் தேனபிஷேகம் மிகவும் பிரசித்துபெற்றதாக இருந்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய சிறப்பு மிக்க ஸ்தலத்துக்கு, மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சந்நிதானமான ஸ்ரீ ஹரிஹர ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக வருகை தந்தார். அவருக்கு ஊர் எல்லையில் பொதுமக்கள் சார்பில் பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருக்கோயில் வாசலில், நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

பின்னர் அவர், பிரளயம் காத்த விநாயகர், சாட்சிநாதசுவாமி மற்றும் கரும்படு சொல்லியம்மை ஆகிய சந்நிதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து குருமகா சன்னிதானம் கூறியதாவது, ``பெரும்பாலான திருக்கோயில்களின் குடமுழுக்கு தாமதமாவதற்குக் காரணம், அரசியல்வாதிகள்தான். ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் பல ஆளுங்கட்சி, எதிர்கட்சியினரிடம் உள்ளன. அதற்கான குத்தகைப் பணத்தை முறையாக அவர்கள் செலுத்தாததுடன், பல இடங்களில் ஆதீன நிலங்களை விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர்.

குத்தகைத் தொகையை கட்டாதவர்கள் அடுத்த பிறவியில் வௌவாலாகப் பிறப்பார்கள். இன்றைய இளைய சமுதாயம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றரீதியில் செயல்படுகிறார்கள். அரசியலும் சினிமாவும் அவர்களைப் பெரிய அளவில் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ டாஸ்மாக் செல்கிறார்கள். இதைத் தடுக்க அரசு மதுபான கடைகளை மூட வேண்டும், கல்வி கற்பதற்காக வெளிநாடுகள் செல்வதை இன்றைய இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும்.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

உக்ரேனிலிருந்து தமிழர்களை மீட்பதில், தமிழக அரசும், மத்திய அரசும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. நான் பொறுப்பேற்று ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. ஆதீன கோயில்களில் முறையாக பூஜைகள் நடக்கவும், கோயிலுக்குரிய நிலங்கள், சொத்துகளை முறையாகப் பராமரிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன். கோயில் கும்பாபிஷேகங்களை தமிழில் செய்வதில் தவறில்லை. இன்றைய அர்ச்சகர்கள் பலர் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டும், சகலவிதமான கெட்ட பழக்கங்களுடனும் உள்ளனர். சுவாமியைத் தொட்டு பூஜிக்கும் அவர்கள் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் வரவேற்புக்குரியது” என்றார்.