Published:Updated:

மதுரை: வேட்பாளர் பட்டியல் தந்த ஷாக்; அதிமுக மேயர் வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

மதுரை | அதிமுக

அதிமுக வெற்றிபெற்றால், முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர்கள் சுகந்தி அசோக், சண்முகப்பிரியா ஹோசிமின் ஆகியோர்களில் ஒருவருக்கே மேயர் பதவி கிடைக்கும் எனப் பரபரக்கிறது மதுரை அதிமுக.

மதுரை: வேட்பாளர் பட்டியல் தந்த ஷாக்; அதிமுக மேயர் வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

அதிமுக வெற்றிபெற்றால், முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர்கள் சுகந்தி அசோக், சண்முகப்பிரியா ஹோசிமின் ஆகியோர்களில் ஒருவருக்கே மேயர் பதவி கிடைக்கும் எனப் பரபரக்கிறது மதுரை அதிமுக.

Published:Updated:
மதுரை | அதிமுக

`அதிமுக வெற்றிபெற்றால், இவர்களில் ஒருவர்தான் மேயர்’ என்று மூன்று பெண் கவுன்சிலர் வேட்பாளர்களைச் சுட்டிக்காட்டி மதுரை அதிமுக-வினர் பேசிவருவது பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

சண்முகவள்ளி-சுகந்தி-சண்முகப்ரியா
சண்முகவள்ளி-சுகந்தி-சண்முகப்ரியா

மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா குடும்பத்திலிருந்து மேயர் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். அதில் அவர்களின் குடும்பத்தினர் பெயர் எதுவுமில்லை.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அதேநேரம், பல முன்னாள் கவுன்சிலர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்களே அதிகம் அறிவிக்கப்பட்டுள்ளனராம். அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் முன்னாள் கவுன்சிலர்கள் மூன்று பேரைக் குறிப்பிட்டே அதிமுக-வினர் பேசிவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அதிமுக வெற்றிபெற்றால், முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர்கள் சுகந்தி அசோக், சண்முகப்பிரியா ஹோசிமின் ஆகியோர்களில் ஒருவருக்கே மேயர் பதவி கிடைக்கும். அந்த அளவுக்கு அவர்கள் இப்போதே காய்நகர்த்திவருகிறார்கள்” என்கிறார்கள் மதுரை அதிமுக-வினர்.

சண்முகவள்ளி-சுகந்தி-சண்முகப்ரியா
சண்முகவள்ளி-சுகந்தி-சண்முகப்ரியா

சண்முகவள்ளி ஏற்கெனவே மாநகராட்சி மண்டலத் தலைவராக இருந்தவர். செல்லூர் ராஜூவின் தீவிர ஆதரவாளர். இதேபோல் சுகந்தி அசோக், ஏற்கெனவே கவுன்சிலராக வெற்றிபெற்று, மாநகராட்சியில் கல்விக்குழுத் தலைவராக இருந்தவர். அடுத்து முன்னாள் கவுன்சிலர் சண்முகப்பிரியா ஹோசிமின், மகளிரணியில் மாவட்ட நிர்வாகியாக இருந்தவர்.

இந்த மூவரில் ஒருவருக்குத்தான் மேயர் பதவி கொடுக்கப்படும், காரணம், மூவரும் செல்லூர் ராஜூவின் ஆதரவைப் பெற்றவர்கள் என்கிறார்கள். அதேநேரம், கட்சியில் மற்றொரு தரப்பினர் இவர்கள் மீது அதிருப்தியும் தெரிவித்துவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism