Published:Updated:

மதுரை: பூரி, சோறு, ஆம்லேட்... ஹோட்டலாக மாறிய அம்மா உணவகம்?! - நடவடிக்கை எடுத்த கமிஷனர்

அம்மா உணவகம்

மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு அம்மா உணவகங்களை அந்தந்தப் பகுதி தி.மு.க கவுன்சிலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மதுரை: பூரி, சோறு, ஆம்லேட்... ஹோட்டலாக மாறிய அம்மா உணவகம்?! - நடவடிக்கை எடுத்த கமிஷனர்

மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு அம்மா உணவகங்களை அந்தந்தப் பகுதி தி.மு.க கவுன்சிலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

Published:Updated:
அம்மா உணவகம்

மதுரை புதூரிலுள்ள அம்மா உணவகத்தை அப்பகுதி தி.மு.க கவுன்சிலர் கையகப்படுத்தி, ஹோட்டல்போல் மாற்றியுள்ளதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. இதுபோல் மற்ற அம்மா உணவகங்களும் தி.மு.க-வினரின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் மிகக் குறைவான விலையில் உணவு வழங்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அனைத்து நகரங்களிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. கொரோனா காலத்தில் அம்மா உணவகங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு அம்மா உணவகம் குறித்த சில சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. சில இடங்களில் போர்டுகள் அகற்றப்பட்டன. பின்னர் அ.தி.மு.க-வினர் எதிர்த்ததால் அம்மா உணவகம் வழக்கம்போலச் செயல்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் மதுரையிலுள்ள சில அம்மா உணவகங்களில் கலைஞர் கருணாநிதி படம் வைக்கப்பட்டதும் விவாதமானது. தற்போது நகரிலுள்ள 10 அம்மா உணவகங்களையும் மாநகராட்சியின் கண்காணிப்பில் மகளிர் குழுக்கள் செயல்படுத்திவருகின்றன.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

இந்த நிலையில்தான் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு அம்மா உணவகங்களை அந்தந்தப் பகுதி தி.மு.க கவுன்சிலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

புதூர் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட தி.மு.க கவுன்சிலர் ஒருவர், மாநகராட்சி அனுமதித்துள்ள உணவுகளுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தியும், மதியத்தில் வழக்கமான கலவை சாதத்துக்குப் பதிலாக சோறு, சாம்பார், ரசம், மோர், ஆம்லேட் என வழங்க உத்தரவிட்டுள்ளாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இட்லி தயாரிக்கப்பட்ட இந்த உணவகத்தில் அது பாதியாகக் குறைக்கப்பட்டு தோசையாக மாற்றப்பட்டுள்ளது. தோசை, பூரி மசாலா, சப்பாத்தி ரூ.5-க்கும், பொங்கல், உப்புமா ரூ.10-க்கும், வடை ரூ.2-க்கும், மினி மீல்ஸ் ரூ.10-க்கும், ஆம்லேட் ரூ.10-க்கும் வழங்குகிறார்கள்.

மக்கள் பலன்பெறும் வகையில் மலிவாக உணவு வழங்கப்படுகிறது. இது குற்றமா... என்று தி.மு.க-வினர் தரப்பில் சொல்லப்பட்டாலும், இப்படியே போனால் நாளடைவில் இது தனியார் உணவகமாக மாறிவிடும் அபாயமுள்ளது. அரசு விதிகளின்படிதான் அம்மா உணவகத்தை நடத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்மா உணவகத்தை கவுன்சிலர் எப்படி நடத்தலாம் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்
மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்

பரபரப்பை எற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-ஸிடம் கேட்டோம், ``அம்மா உணவகங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதை மீறிச் செயல்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையிலுள்ள அம்மா உணவகங்களை மகளிர்குழுக்கள் நடத்திவருகிறார்கள். அவர்களுக்குச் சம்பளம், அரிசி, காய்கறிகள் உணவுப்பொருள்கள் என அனைத்தும் அரசுத் தரப்பில் செயது தரப்படுகிறது. புதூர் அம்மா உணவகத்தில் விதிகளை மீறிச் செயல்பட்ட தகவல் வந்ததும், விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறொரு மகளிர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் என்ன மாதிரியான உணவுகள், எந்த விலைக்கு விற்கப்பட வேண்டும் என்ற நார்ம்ஸ் உள்ளன. அவை முறையாகக் கடைபிடிக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism