Published:Updated:

மதுரை: கொரோனா நிவாரண நிதி; சிறுவனை பாராட்டிய முதல்வர்! - தலைமைக்கு புகார் அனுப்பிய திமுகவினர்?!

சைக்கிள் பரிசளித்த திமுகவினர்

முதலமைச்சர் நிவாரணத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமென்றால் மதுரை கலெக்டர் அலுவலகத்திலயே வழங்கலாம். அதை விடுத்து சென்னைக்கு அனுப்பி அதை விளம்பரப்படுத்தியதில் அரசியல் இருக்கு என்கிறார்கள்..!

மதுரை: கொரோனா நிவாரண நிதி; சிறுவனை பாராட்டிய முதல்வர்! - தலைமைக்கு புகார் அனுப்பிய திமுகவினர்?!

முதலமைச்சர் நிவாரணத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமென்றால் மதுரை கலெக்டர் அலுவலகத்திலயே வழங்கலாம். அதை விடுத்து சென்னைக்கு அனுப்பி அதை விளம்பரப்படுத்தியதில் அரசியல் இருக்கு என்கிறார்கள்..!

Published:Updated:
சைக்கிள் பரிசளித்த திமுகவினர்

கொரோனா நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை அனுப்பிய மதுரை சிறுவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் பாராட்டியதும், அச்சிறுவனுக்கு சைக்கிள் வழங்கியுள்ளதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவனின் பின்னணி பற்றி திமுகவினர் கட்சித் தலைமைக்கு அனுப்பி வரும் தகவல்கள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நிவாரண நிதி
நிவாரண நிதி

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாமல் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் முதலமைச்சர் நிவாராண நிதிக்கு பணம் அனுப்பி வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் 7 வயது மகன் ஹரீஷ் வர்மன் சைக்கிள் வாங்க, தான் உண்டியலில் சேர்த்த ரூ 1,000-ஐ, கொரோனா பாதிப்புக்கு செலவு செய்ய முதலமைச்சருக்கு டிடி எடுத்து அனுப்பியுள்ளார்.

சைக்கிள் பரிசளித்த திமுகவினர்
சைக்கிள் பரிசளித்த திமுகவினர்

இந்த செய்தியை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசி மூலம் ஹரீஷ் வர்மனை பாராட்டியுள்ளார். மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ கோ.தளபதி அச்சிறுவனுக்கு முதலமைச்சர் சார்பாக சைக்கிளை பரிசாக வழங்கினார். இந்த சம்பவம் இன்று வைரல் ஆனது. சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பின்னால் அரசியல் உள்ளதாக திமுகவினர் கூறி வருவது மட்டுமில்லாமல் இதைப்பற்றி தலைமைக்கும் புகார் அனுப்பி வருகிறார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மிடம் பேசிய திமுகவினர் சிலர், "முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிப்பது நல்ல விஷயம், அதிலும் குழந்தைகளிடம் அந்த எண்ணம் வளர்வது எல்லோரையும் ஊக்கப்படுத்தும். அப்படித்தான் முதலில் நாங்கள் நினைத்தோம். முதல்வரும் அப்படி நினைத்துதான் பாராட்டினார். அனால், இப்போது தான் இதனை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

பிரச்சனையை உண்டாக்கிய போஸ்டர்
பிரச்சனையை உண்டாக்கிய போஸ்டர்

முதலமைச்சர் நிவாரணத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமென்றால் மதுரை கலெக்டர் அலுவலகத்திலயே வழங்கலாம். அதை விடுத்து சென்னைக்கு அனுப்பி அதை விளம்பரப்படுத்தியதில் அரசியல் இருக்கு.

மதுரை திமுகவில் செயல்பட்டு வந்த ஸ்டாலின், அழகிரி என்ற இரண்டு அணிகள் இன்னும் அதிகம் பிளவுபட காரணமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் மதுரையில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர்தான். 2014- ல் நடந்த பொதுக்குழுவில் மு.க.அழகிரி முன்னிலை வகிப்பதுபோல் ஒட்டப்பட்ட போஸ்டர்தான் கட்சிக்குள் பெரும் கலகத்தை உண்டாக்கியது. இந்த போஸ்டருக்கு காரணமானவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டிய சிறுவன் ஹரீஸ் வர்மனின் தந்தை இளங்கோவன்.

தற்போது திமுகவுடன் இணைந்து செல்ல அழகிரி முடிவெடுத்துள்ளாராம். ஸ்டாலினும் அதற்கு ஒத்துக்கொண்டதாக ஒரு தகவல். அதே நேரம் தீவிர அரசியலில் ஈடுபட அழகிரி விரும்பவில்லை. அதனால், அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வர முடியாத நிலை. அதனால், இதுபோல் டச்சிங்காக வேலை செய்து முதலமைச்சரின் மனதில் இடம் பிடிக்க அழகிரி ஆதரவாளர்கள் ப்ளான் பண்ணி வருகிறார்கள். அதனால் இத்தகவலை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்" என்றனர்.

சிறுவன் வழங்கிய நிதிக்கு பின்னால் இவ்வளவு கதையா என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர ஏற்படுகிறதா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism