Published:Updated:

இரண்டாவது தலைநகரம்... யாருக்காக இந்த சர்க்கஸ்?

மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை

இந்த கோஷத்தை முதலில் ஆரம்பித்துவைத்தவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

இரண்டாவது தலைநகரம்... யாருக்காக இந்த சர்க்கஸ்?

இந்த கோஷத்தை முதலில் ஆரம்பித்துவைத்தவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

Published:Updated:
மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை
சர்க்கஸுக்குச் சென்றிருந்தால் பார்த்திருப்பீர்கள். ஷோ முடியும் தறுவாயில் கருஞ்சிறுத்தை, சிங்கம், புலி போன்ற மிருகங்களை அழைத்து வருவார்கள்.

அப்போது சம்பந்தமே இல்லாமல் குட்டி சைக்கிளில் கோமாளிகள் சிலர் குறுக்கே மறுக்கே ஓடி கிச்சுக்கிச்சு காட்ட முயல்வார்கள். அதுபோல, யார் அடுத்த முதல்வர் வேட்பாளர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, தேசிய கல்விக் கொள்கை... எனப் பல்வேறு விவகாரங்கள் தமிழக அரசியலைத் தகிக்கவைத்துக் கொண்டிருக்கும் சூழலில், ‘தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் அமைக்க வேண்டும்’ எனக் குறுக்கே மறுக்கே அமைச்சர்கள் சிலர் ஓடுவது வேடிக்கை!

இரண்டாவது தலைநகரம்... யாருக்காக இந்த சர்க்கஸ்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த கோஷத்தை முதலில் ஆரம்பித்துவைத்தவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ‘‘குஜராத்தில் அகமதாபாத், காந்திநகர் என இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. அதுபோல தமிழகத்திலும் இரண்டு தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். சென்னையில் ஒரு கோடி மக்கள் இருப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றினால், இழந்துபோன தொழில்கள் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு வரும். முதலீடுகள் அதிகரிக்கும். வேலைக்காக, தென்மாவட்ட இளைஞர்கள் சென்னைக்குப் படையெடுக்கும் தேவையிருக்காது” என்றார். ஓர் அமைச்சர் பேசிவிட்டால், அதற்கு எதிர்ப்பதமாக வேறொருவர் பேசுவதுதானே இப்போதுள்ள அ.தி.மு.க டிரெண்ட்!

ஆர்.பி.உதயகுமாரின் இரண்டாம் தலைநகர் கோரிக்கைக்கு ‘ஆமாம்’ போட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மதுரைக்கு `நோ’ சொல்லி, திருச்சிக்கு விஷயத்தை திசைதிருப்பினார். ‘‘திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். இதுவே எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம்’’ என்று வாய்திறந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நமக்கு எழும் கேள்வி யெல்லாம் இதுதான்... அ.தி.மு.க ஆட்சியிலிருந்த இந்த ஒன்பது வருடங்களாக இந்தக் கோரிக்கை எங்கே போயிருந்தது?

அ.தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் அதிகரித்திருக்கும் நிலையில், மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கையாக இந்த நாடகம் அரங்கேற்றப் படுகிறதா?

ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன்
ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன்

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசியபோது, ‘‘எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, `தலைநகரம் மத்தியப் பகுதியில் இருக்க வேண்டும்; என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எம்.ஜி.ஆர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. அவர் அப்படிச் சொன்னதாகச் சொல்லி, தவறான கருத்துகளைப் பரப்புவது தவறு. தமிழகத்தில் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் நிர்வாகரீதியாக ஏதாவது குறை இருந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை நிவர்த்தி செய்வார். அமைச்சர்கள் தங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, பொதுவெளியில் பேசுவது ஆட்சிக்கும், கட்சிக்கும், மக்களுக்கும் நல்லதல்ல. முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள், கோரிக்கை வைக்கும் இடத்தில் இருக்கக் கூடாது’’ என்றார்.

இன்னும் என்னென்ன கூத்துகள் அரங்கேறப் போகின்றனவோ!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘சென்னை, இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக வேண்டும்!’’

...என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார்.

‘‘இந்தக் கோரிக்கையை எழுப்ப வேண்டிய அவசியம் என்ன?’’

இரண்டாவது தலைநகரம்... யாருக்காக இந்த சர்க்கஸ்?

‘‘இந்தக் கோரிக்கை புதிது கிடையாது. அம்பேத்கர்தான் முதலில் இதுபற்றிப் பேசியிருக்கிறார். மொழிவாரி மாநிலங்கள் குறித்து அவர் எழுதியுள்ள நூலில் இது குறித்து ஓர் அத்தியாயமே எழுதியுள்ளார். அதில் அவர், `டெல்லி வடகோடியில் இருக்கிறது. நாட்டின் எல்லா இடங்களையும் நிர்வாகம் செய்வதற்கு டெல்லி உகந்த இடமல்ல. கோடையில் கடுமையான வெயிலும், குளிர்காலத்தில் கடும் குளிரும் டெல்லியின் பருவ நிலையை ஆதிக்கம் கொள்கின்றன. பாகிஸ்தானின் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால், பாதுகாப்பு காரணங் களுக்காகவும் உகந்த இடமல்ல. ஆகவே, இந்தியாவுக்கு இரண்டு தலைநகரங்கள் அவசியம். தென் மாநிலங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்டு பார்த்தால், ஹைதராபாத்தில் இரண்டாவது தலைநகரம் அமைக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், இந்தக் கோரிக்கை அமைதியாகிவிட்டது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, `ஹைதரபாத்தை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும்’ என்ற கோஷத்தை ஆந்திரா, தெலங்கனா அரசியல் பிரமுகர்கள் மீண்டும் எழுப்பினர். தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் போன்றவர்கள்கூட இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். 2019, நவம்பரில் ஆந்திர எம்.பி ஒருவர் மாநிலங்களவையில் இது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, இந்தக் கோரிக்கையை உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. ஜி.எஸ்.டி வரி, தேசிய கல்விக் கொள்கை போன்றவை மூலமாக மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. பொதுப்பட்டியலில் இருக்கும் விஷயங்களையும் மத்திய அரசு கைப்பற்றிக் கொள்கிறது. இந்தச் சூழலில்தான், `அதிகாரப் பரவலை உறுதிப்படுத்த நாட்டின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் பேதம் பார்க்காமல் இந்தக் கோரிக்கைக்கு வலு சேர்க்க வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து சென்னை ஒரு நிர்வாகத் தலைநகராக இருக்கிறது. `உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்’ என்று ஏற்கெனவே கோரியுள்ளோம். துறைமுகம், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்கள் நமக்கு இருப்பதால், பொருளாதாரரீதியாகவும் நாம் உயர முடியும். அதற்கான முழுத்தகுதியும் சென்னைக்கு இருக்கிறது.”

‘‘ `தமிழகத்திலும் இரண்டாவது தலைநகரம் அமைக்க வேண்டும்’ என்று அமைச்சர்கள் பேசி வருகிறார்களே..?’’

‘‘அதிகாரப் பரவல் என்பது தமிழகத்துக்கும் பொருந்தும். இது ஏற்க வேண்டிய கோரிக்கைதான். அமைச்சர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் கொண்டுவரலாமே! உட்கட்சிப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே இதுபோன்ற கோரிக்கையை அவர்கள் எழுப்புவதாகத் தோன்றுகிறது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism