Published:Updated:

`தமிழகத்துக்கு வெறும் 10,000 ரூபாய்; உ.பி-க்கு ரூ.7,000 கோடி!' - கொதிக்கும் சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.10,000 மட்டுமே ஒதுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பட்ஜெட்டை பற்றி பலவித ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில் சு.வெங்கடேசனின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன் ,``ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 10 திட்டங்களுக்கு 12,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், பட்ஜெட்டில் 10,000 ரூபாய் மட்டும் ஒதுக்கியுள்ளார்கள். இது மிகப்பெரிய அநீதி. அதே நேரம், உத்தரப்பிரதேசத்துக்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். இது என்ன மாதிரியான அணுகுமுறை?

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஜி.எஸ்.டி-யில் தமிழகம்தான் அதிகமான வருவாயை மத்திய அரசுக்குக் கொடுக்கிறது. அப்படியுள்ள நிலையில் தமிழகத்துக்கு அநீதி இழைத்துள்ளார்கள். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. வெறும் 10,000 ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும். அதுபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி அளிக்காமல் ஜப்பான் வங்கியில் கடன் கேட்டுள்ளது. அதனால் பணம் வந்துவிடும். ஆனால், மத்திய அரசும் தமிழக அரசும் ஆரம்பகட்ட பணிகளில் சுணக்கம் காட்டுவதால் தாமதமாகிறது. அதேநேரம் தமிழ்நாட்டோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் எய்ம்ஸ்-க்கு இந்தாண்டு அட்மிஷன் நடத்த உள்ளார்கள். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு