Published:Updated:

மகாராஷ்டிரா: `அரசியல் தெரியாவிட்டால் வீட்டில் போய் சமையுங்கள்!' -சரத் பவார் மகளைச் சாடிய பாஜக தலைவர்

சந்திரகாந்த் பாட்டீல்

`டெல்லிக்கு போங்கள் அல்லது நரகத்துக்குப் போங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் இட ஒதுக்கீடு கொடுங்கள்.' - சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிரா: `அரசியல் தெரியாவிட்டால் வீட்டில் போய் சமையுங்கள்!' -சரத் பவார் மகளைச் சாடிய பாஜக தலைவர்

`டெல்லிக்கு போங்கள் அல்லது நரகத்துக்குப் போங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் இட ஒதுக்கீடு கொடுங்கள்.' - சந்திரகாந்த் பாட்டீல்

Published:Updated:
சந்திரகாந்த் பாட்டீல்

உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மகாராஷ்டிராவில் பிரச்னை நிலவிவருகிறது. சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியிருக்கிறது. அதைப் பின்பற்றி மகாராஷ்டிராவுக்கும் அனுமதி பெற மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்னை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி பேசினார். ``மத்தியப் பிரதேச முதல்வர் டெல்லிக்குச் சென்று யாரையோ பார்த்தார். அடுத்த இரண்டு நாள்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

சுப்ரியா பேசிய கூட்டத்துக்கு சற்று தொலைவில் மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கட்சிக் கூட்டத்தில் பேசினார். அவர் சுப்ரியாவை கடுமையாக விமர்சனம் செய்தார். ``ஏன் அரசியலில் இருக்கிறீர்கள்... வீட்டுக்குப் போய் சமைக்கவேண்டியதுதானே. அரசியலில் இருக்கும் உங்களால் ஒரு முதல்வரை எப்படிச் சந்திக்க வேண்டும் என்று தெரியவில்லையா... டெல்லிக்கு போங்கள் அல்லது நரகத்துக்குப் போங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் இட ஒதுக்கீடு கொடுங்கள்" என்று தெரிவித்தார்.

சந்திரகாந்த் பாட்டீலின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சரத் பவாரின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் சுப்ரியாவை இந்த அளவுக்கு மோசமாக மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் விமர்சனம் செய்திருப்பதற்கு சுப்ரியாவின் கணவர் சதானந்த் சுலே கணவர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ``என் மனைவி குடும்பத் தலைவியாகவும், தாயாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க சரத் பவார் முக்கியக் காரணமாக இருக்கிறார். அதனால், பா.ஜ.க., சரத் பவார்மீது கடும் கோபத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism