Published:Updated:

மகாராஷ்டிரா: 40 நாள்களுக்கு பின் அமைச்சரவை பதவியேற்றும், இலாகா ஒதுக்குவதில் இழுபறி - என்ன நடக்கிறது?

அமைச்சர்கள் பதவியேற்பு

மகாராஷ்டிராவில் அரசு பதவியேற்று 40 நாள்கள் கழித்து அமைச்சரவை பதவியேற்றும் இலாகா ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: 40 நாள்களுக்கு பின் அமைச்சரவை பதவியேற்றும், இலாகா ஒதுக்குவதில் இழுபறி - என்ன நடக்கிறது?

மகாராஷ்டிராவில் அரசு பதவியேற்று 40 நாள்கள் கழித்து அமைச்சரவை பதவியேற்றும் இலாகா ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
அமைச்சர்கள் பதவியேற்பு

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. சிவசேனாவை இரண்டாக உடைத்து அதிலிருந்து கணிசமான எம்.எல்.ஏ-க்களை ஏக்நாத் ஷிண்டே இழுத்து வந்து பாஜக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார். முதல்வராக ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் மட்டுமே பதவியேற்றனர். எஞ்சிய அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அமைச்சரவை விரிவாக்கத்தை தள்ளிப்போட பாஜக முயன்றது. ஆனால் அரசு பதவியேற்று ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் அமைச்சர்கள் இல்லாமல் நிர்வாகம் முடங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

சந்திரகாந்த் பாட்டீல் பதவியேற்பு
சந்திரகாந்த் பாட்டீல் பதவியேற்பு

அதோடு அமைச்சர்களின் அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. தேவேந்திர பட்னாவிஸ் டெல்லிக்குச் சென்று பாஜக தலைவர்களை சந்தித்து இது குறித்துப் பேசினார். அவர்கள் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தனர். இதனால் மேற்கொண்டு தாமதம் செய்யாமல் அமைச்சரவை விரிவாக்கத்தை செய்ய ஏக்நாத் ஷிண்டேயும், பாஜக-வும் முடிவு செய்தார்கள். தொடர்ந்து கடந்த 9-ம் தேதி அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. இதில் பாஜக தரப்பில் ஒன்பது பேரும், ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஒன்பது பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சரவை பதவியேற்று மூன்று நாள்களாகிவிட்ட நிலையில் இலாகா ஒதுக்குவதில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தரப்பில் இழுபறி நீடித்துவருகிறது. உள்துறை அமைச்சகத்தை ஏக்நாத் ஷிண்டேயும், பாஜக-வினரும் கேட்டுவருகிறார்கள். பாஜக-வில் உள்துறை அமைச்சகத்தைப் பெற தேவேந்திர பட்னாவிஸ், சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. பாஜக தரப்பில் யாருக்கு என்ன இலாகா கொடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே தரப்பில் யாருக்கு எந்த இலாகா கொடுக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாவதில் சிக்கல் நீடித்துவருகிறது. இந்த மாதம் 15-ம் தேதிக்குள் இலாகா ஒதுக்கிவிடுவோம் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.