Published:Updated:

``நாங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவில்லை; மக்கள் விரும்பியதைத்தான் செய்தோம்!" - ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

``பால் தாக்கரே எங்கள் உயிர். நாங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவில்லை' என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

``நாங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவில்லை; மக்கள் விரும்பியதைத்தான் செய்தோம்!" - ஏக்நாத் ஷிண்டே

``பால் தாக்கரே எங்கள் உயிர். நாங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவில்லை' என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்து அதிலிருந்து 40 எம்.எல்.ஏ-க்களை பிரித்துக்கொண்டு வந்து பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைத்திருக்கிறார். ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் ரூ.50 கோடி கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது. சமீபத்தில் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் இது தொடர்பாக ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``முதல்வர் என்பவர் சாமானிய மனிதர். அவர் முதல்வர் கிடையாது. பணத்தைக்கொண்டு 50 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது. எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. எனவேதான் மக்கள் விரும்புவதை நாங்கள் செய்தோம். மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தான் செய்தோம். இது இயற்கையான கூட்டணி. மக்கள் எங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்கின்றனர். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டது பிளவு கிடையாது.

``நாங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவில்லை; மக்கள் விரும்பியதைத்தான் செய்தோம்!" - ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா மேம்பாட்டுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை. பா.ஜ.க-வுடன் நாங்கள் 25 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருக்கிறோம். இதற்கு முன்பு எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஒருபோதும் பிரிந்தது கிடையாது. தலைமை குறித்து பிரச்னை என்றால் சிவசேனா தேவேந்திர பட்னாவிஸுடன் பேசியிருக்க வேண்டும். இதற்கு முன்பு பட்னாவிஸுடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. பா.ஜ.க எங்களது இயற்கையான கூட்டணி. எனவே, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் கேட்டுக்கொண்டேன். அவருக்கு இந்த விவகாரத்தில் புரியவைக்க முயன்றேன். பால் தாக்கரே என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ, அதைத்தான் நாங்கள் செய்கிறோம். பா.ஜ.க-வும் பால் தாக்கரே விரும்பியதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. நான் ஏதோ ஆதாயத்துக்காக முதல்வராகவில்லை. மகாராஷ்டிராவின் மேம்பாட்டுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஷ் அகாடி அரசால் எந்தவித முடிவையும் எடுக்க முடியாததை நாங்கள் பார்த்தோம். அதனால் இந்த முடிவுக்கு வந்தோம். ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டேன் என்றால், அதன் பிறகு என்னை நானே கேட்பதில்லை.

மும்பையிலிருந்து நாக்பூருக்கு அமைக்கப்படும் ஆறுவழிச் சாலை இன்னும் ஓர் ஆண்டுக்குள் திறக்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மும்பையில் சாலைகளில் குண்டும் குழியுமாக இருக்கும் பிரச்னைக்குத் தீர்வுகாண இரண்டு ஆண்டுகளில் அனைத்துச் சாலைகளும் கான்கிரீட் மயமாக்கப்படும். செமி கண்டக்டர் தொழிற்சாலை குஜராத்துக்கு சென்ற விவகாரத்தில் நான் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வாலிடம் பேசினேன். குஜராத்தில் இந்தத் தொழிற்சாலையை அமைப்பது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவுசெய்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தார். புதிய தொழிற்சாலைகளை மகாராஷ்டிராவுக்கு கொண்டுவரத் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்வதற்கான பணிகள் நடந்துவருகின்றன. இதற்காகக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டுவருகின்றன" என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவுக்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை மற்றும் டாடா ஏர்பஸ் போர் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை குஜராத்துக்குச் சென்றதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றன. ஆனால், அனைத்து ஒப்பந்தங்களும் சிவசேனா ஆட்சியிலிருந்தபோதே செய்யப்பட்டுவிட்டதாக பா.ஜ.க கூறிவருகிறது. மகாராஷ்டிராவுக்குப் பெரிய தொழிற்திட்டத்தை பிரதமர் மோடி கொடுப்பதாக பா.ஜ.க மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூறிவந்தது. மகாராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்குள் ஏதாவது பெரிய தொழிற்சாலையை மகாராஷ்டிராவுக்கு கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு இருக்கிறது.