Published:Updated:

கூட்டணியில் திடீர் குழப்பம்; எச்சரித்த தாக்கரே - சட்டமேலவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகிறாரா?

சட்டமேலவை தேர்தலில் தேவையில்லாத சிக்கல்கள் வேண்டாம் என தாக்கரே விரும்புவதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிரா அரசியல் களம் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக இருக்கும் உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தில் போட்டியிடாமல் முதல்வர் அரியணையில் அமர்ந்துள்ளார். பல மாநிலங்களில் இதுவழக்கமாக நடக்கக்கூடிய அரசியல் ஸ்டண்ட் தான். முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டு தனக்கு விசுவாசமாக இருக்கும் கட்சி எம்.எல்.ஏக்களை யாரையாவது ராஜினாமா செய்யச் சொல்லி அந்த தொகுதியில் களம் காணுவார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பல்வேறு குழப்பங்கள் நீடித்தது.

உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வான போது
உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வான போது

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. சுழற்சி முறையில் ஆட்சியில் பங்கு என அதிகார பகிர்வு மோதலால் இந்தக் கூட்டணி தேர்தலுக்கு பிறகு முறிந்தது.இதனால் என்ன மீண்டும் தேர்தலா வைக்கமுடியும். யார் சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார்களோ அரியணை அவர்களுக்கு சொந்தம் என்ற நிலை உருவானது. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் ட்விஸ்டாக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலாவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி உறுதியானது. பல மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்ததால் மகாராஷ்டிரா விஷயத்தில் கொஞ்சம் வேகமாக மூவ் செய்து சிவசேனாவை சேர்ந்த உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக நின்றது.

`போலீஸாரின் வாழ்க்கையுடன் நான் விளையாட விரும்பவில்லை!' - மதுக்கடை விவகாரத்தில் டெல்லி கமிஷ்னர்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் ஆகலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி 6 மாத காலத்துக்குள் சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது சட்டமேலவை உறுப்பினராக தேர்வாக வேண்டும். இல்லையென்றால் முதல்வர் பதவியில் நீட்டிக்க முடியாது. மகாராஷ்டிராவில் 9 சட்டமேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்நிலையில் 9 சட்டமேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மே 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாஜக 4 வேட்பாளர்களையும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை 288 உறுப்பினரை கொண்டது. சட்டமேலவை உறுப்பினராக 28 ஓட்டுகள் வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் அவர்களுக்கு சட்டப்பேரவையில் 44 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் 2 வேட்பாளர்களை களமிறக்கினால் தனது வெற்றிக்கு இடையூறாக இருக்கும் என உத்தவ் தாக்கரே எண்ணினார். இதனால் கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தான் போட்டியிடப்போவதில்லை என உத்தவ் தாக்கரே கூட்டணி கட்சிகளிடம் கூறியுள்ளார். சட்டமேலவை உறுப்பினர்களுக்கான இந்தத் தேர்தல் போட்டியின்றி நடக்க வேண்டும் என்பதே தாக்கரேவின் விருப்பமாக இருப்பதாகவும், கொரோனா வைரஸ் எதிராக மாநிலம் போராடி வரும் வேளையில் அந்தப்பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட விரும்புகிறார். தேர்தலில் தேவையில்லாத சிக்கல்கள் வேண்டாம் என தாக்கரே விரும்புவதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை மட்டும் களமிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அறிவித்த இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே தேர்தலில் களம்காண்பார் என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவால் உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாகி, தனது முதல்வர் பதவியை தக்க வைக்கவுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு