Published:Updated:

`மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அடிப்பேன்!' - என்ற மத்திய அமைச்சர் கைது!

நாராயண் ராணே
நாராயண் ராணே

மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு எதிராக மகாராஷ்டிரா போலீஸாரால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அமைச்சர் நாராயண் ராணே, சமீபத்தில் மும்பையில் ஜன் ஆசீர்வாத் யாத்திரை நடத்தினார். இந்த யாத்திரையின்போது கொரோனா விதிகளை மீறியதாக பாஜக-வினர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. நாராயண் ராணே வந்து சென்ற பிறகு மறைந்த பால் தாக்கரேவின் நினைவுச்சின்னத்தை சிவசேனாவினர் புனிதப்படுத்தினர். ஜன் ஆசீர்வாத் யாத்திரை ராய்கட் மாவட்டம், மஹாடு என்ற இடத்தில் சென்றபோது நாராயண் ராணே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். உத்தவ் தாக்கரே சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையில் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை சரியாகக் கூறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த நாராயண் ராணே, ``நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டை மறந்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது.

ராணே வீட்டுக்கு வெளியில் போராட்டம்
ராணே வீட்டுக்கு வெளியில் போராட்டம்

சுதந்திர தின உரையின்போது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை வேறு ஒருவரிடம் முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டிருக்கிறார். நான் மட்டும் உத்தவ் தாக்கரே சுதந்திர தின உரையாற்றும்போது அருகில் இருந்திருந்தால் ஓங்கி அடித்திருப்பேன்" என்று தெரிவித்தார். நாராயண் ராணேவின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ராணேவுக்கு எதிராக நாசிக் மற்றும் புனேயில் சிவசேனாவினர் போலீஸில் புகார் செய்துள்ளனர். முதல்வரை ராணே அவமதித்துவிட்டதாகக் கூறி இந்தப் புகார் மனுக்களை சிவசேனாவினர் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ள நாசிக் போலீஸார் ராணேவுக்கு எதிராகக் கைது செய்ய வாரன்ட் பிறப்பித்துள்ளனர். அவரைக் கைதுசெய்ய டி.ஜி.பி சஞ்சய் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மும்பை முழுக்க ராணேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவினர் போஸ்டர் வைத்துள்ளனர். அதில் ராணேவை `கோழித் திருடன்’ என்று விமர்சித்து பல இடங்களில் பேனர் வைத்துள்ளனர். சிவசேனா எம்.பி விநாயக் ராவத் இது குறித்துக் கூறுகையில், ``பாஜக-வினரைக் குஷிபடுத்த வேண்டும் என்பதற்காக சிவசேனாவையும், அதன் தலைவர்களையும் ராணே விமர்சனம் செய்துவருகிறார்" என்றார். நாராயண் ராணேவின் வீடு மும்பை ஜூகு பகுதியில் இருக்கிறது. அங்கு யுவசேனா தொண்டர்கள் காலையில் அதிக அளவில் குவிந்தனர். அங்கு பாஜக-வினரும் வந்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். கற்கள் மட்டுமல்லாமல் முட்டைகளையும் வீசினர். இதில் ராணே ஆதரவாளர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கட்டுப்படுத்தியாகக் கூடுதல் கமிஷனர் சந்தீப் தெரிவித்தார். போலீஸாரால் ராணே வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

`மத்திய அமைச்சர் தொட்டதால் பால் தாக்கரே நினைவிடம் கெட்டுவிட்டது' - சிவசேனா பேச்சு!

இந்தச் சம்பவத்தால் அங்கு பதற்றாமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாராயண் ராணேயிடம் கேட்டதற்கு, ``நான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் பேசியது ஒன்றும் குற்றமில்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அறிக்கை வெளியிட வேண்டும்" என்றார். ராணேவை உடனே மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனா கேட்டுக்கொண்டிருக்கிறது. நாராயண் ராணே ஆரம்பத்தில் சிவசேனாவில் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றுவிட்டு, இப்போது பாஜக-வில் தஞ்சமடைந்திருக்கிறார். உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே ராணே சிவசேனாவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நாராயண் ராணே தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு