Published:Updated:

`காஷ்மீர் இல்லாத இந்தியா மேப்!'- யோகி கார்ட்டூனால் ட்ரோலுக்கு ஆளான மகிளா காங்கிரஸ்!

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

லக்னோ, சம்பால் பகுதியில் நடக்கும் வன்முறையைக் கண்டிப்புடன் கையாள்வோம். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுபவர்களின் சொந்த உடைமைகள் பறிக்கப்பட்டு, அரசின் இழப்பைச் சரிசெய்ய அவை ஏலத்தில் விடப்படும்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறையில் 18 பேர் கொல்லப்பட்டனர். பொதுச் சொத்துகளும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே, வன்முறை தொடர்பாக சமீபத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ``ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் போன்றவை மொத்த நாட்டையும் தீக்குழியில் தள்ளுகின்றன. லக்னோ, சம்பால் பகுதியில் நடக்கும் வன்முறையைக் கண்டிப்புடன் கையாள்வோம். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுபவர்களின் சொந்த உடைமைகள் பறிக்கப்பட்டு, அரசின் இழப்பைச் சரிசெய்ய அவை ஏலத்தில் விடப்படும்.

போராட்டம்
போராட்டம்

வன்முறையில் ஈடுபட்டவர்களின் சிசிடிவி வீடியோக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடக்கும் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கடுமையாக எச்சரித்திருந்தார். எச்சரிக்கையோடு நில்லாமல் அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்தார்.

வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காக லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைத்ததுடன், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த 130 பேருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் 50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

`யோகி ஆதித்யநாத்தும் பினராயி விஜயனும் ஒன்றுதான்!' - கொதிக்கும் கேரள காங்கிரஸ் தலைவர்

இந்த நோட்டீஸ் தற்போது 372 பேராக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் கணக்கெடுக்கும் பணி ஒருபுறம் நடந்து வருவதுடன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராடிய 1,246 பேரை அதிரடியாக கைது செய்துள்ளது யோகி அரசு.

அதேபோல் வன்முறையில் ஈடுபடுவார்கள் எனக் கூறி 5,558 பேர் டிசம்பர் 10 முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. வன்முறை தொடர்பாக 327 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

`காஷ்மீர் இல்லாத இந்தியா மேப்!'- யோகி கார்ட்டூனால் ட்ரோலுக்கு ஆளான மகிளா காங்கிரஸ்!

இதற்கிடையே, யோகி அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து இன்று மகிளா காங்கிரஸ் சார்பில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் பதிவிடப்பட்டது. அதில், யோகி இந்தியாவை தூக்கில் போடுவதுபோல், இந்திய வரைபடத்தை தூக்குக் கயிற்றில் யோகி பிடித்திருப்பதுபோல் படம் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களில் எதிர்ப்புகளை சம்பாதிக்க ஆரம்பித்தது.

அதற்குக் காரணம் இந்திய வரைபடத்தில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற பகுதிகள் இல்லாமல் இருந்தன. இதை வைத்து மகிளா காங்கிரஸை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். சிலர் யோகி அரசின் நடவடிக்கையை ஆதரித்தும் பதிவுகளை இட்டனர். ட்ரோல்கள் அதிகமாக அந்தக் கார்ட்டூனை மகிளா காங்கிரஸ் நீக்கியது.

அடுத்த கட்டுரைக்கு