Published:Updated:

பத்மபிரியா: `இதை உங்களுடன் பகிர்வது என் கடமை!’ -ம.நீ.ம-விலிருந்து விலக முடிவு

பத்மபிரியா
பத்மபிரியா

ஏற்கெனவே அந்தக் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் கட்சியிலிருந்து விலகினார். இந்தநிலையில் இன்று காலை கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சந்தோஷ் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக அந்தக் கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் பத்மபிரியா அறிவித்துள்ளார். ஏற்கெனவே அந்தக் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் கட்சியிலிருந்து விலகினார். இந்தநிலையில், இன்று காலை கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சந்தோஷ் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும், மதுரவாயல் தொகுயில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டவருமான பத்மபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில், ``அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு... என்மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப்போல் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும், நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும்போல இன்னும் சிறப்பாகத் தொடரும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு