Published:Updated:

` அம்பு எய்தது யார்...?’ - கமல் இல்லத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் கொதிக்கும் ம.நீ.ம

கமல்
கமல்

எத்தனை இடையூறுகள், பழிவாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் எங்கள் தலைவர் அனைத்தையும் முறியடித்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் வருவார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இல்லத்தில், `கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்டவர்' என்ற சுவரொட்டியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்பு, அது தவறாக ஒட்டப்பட்டதாகக் கூறி சுவரொட்டி அகற்றப்பட்டது. இந்தச் சம்பவம் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களைக் கோபம் கொள்ள வைத்துள்ளது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளார் அணியின் மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி, '' கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தனது இல்லத்தையே ஏழை எளிய மக்களின் மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து, தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார் எங்கள் தலைவர். அவரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், இப்படியொரு சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

அவரைத் தனிமைப்படுத்தியிருப்பதாக சித்திரிக்க முயன்ற சென்னை மாநகராட்சிக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம்.

சு.ஆ.பொன்னுசாமி
சு.ஆ.பொன்னுசாமி

எத்தனை இடையூறுகள், பழிவாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் எங்களது தலைவர் அனைத்தையும் முறியடித்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் வருவார் .

இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அம்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த அம்புகளை எய்தது யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தச் செயலுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கமல்
கமல்

மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் ரசிகர்களும் அச்சப்பட வேண்டாம். நம்மவர் நலமாகவே இருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு