Published:Updated:

``ஜெ. கூட்டத்துக்காக என் உணவகம் தரைமட்டம் ஆகாதிருந்தால்..?" - மனம் திறக்கும் மல்லை சத்யா!

மல்லை சத்யா
மல்லை சத்யா

எஸ்.ஐ ஆகியிருந்தால் இந்நேரம் பல பதவி உயர்வுகளோடும் பதக்கங்களோடும் இந்த வருஷத்தில் ரிட்டையர்டு ஆகியிருப்பேன்.

"1991-ல் அப்போதைய முதல்வர், ஜெயலலிதா மாமல்லபுரத்தில் நடந்த நாட்டிய விழாவுக்கு வராமல் இருந்திருந்தால், அந்தக் கூட்டத்துக்காக என்னுடைய ரெஸ்டாரன்டை இடிக்காமல் இருந்திருந்தால், நான் அரசியலுக்கே வந்திருக்கமாட்டேன். இன்று, உணவகத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு பிசினஸ் மேனாகியிருப்பேன்.

நான் மகாபலிபுரத்தில், இரண்டு மிகப்பெரிய உணவகங்கள், ஒரு கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையம் ஆகிய தொழில்களில் மிகவும் பிஸியாக இருந்த காலகட்டம் அது. அப்போதுதான் ஜெயலலிதா தமிழகத்தில் முதன்முறையாக முதல்வர் ஆனார். அவர் கூட்டம் நடத்துவதற்காக என்னுடைய ரெஸ்டாரன்டை இடித்துத் தரைமட்டமாகிவிட்டனர்.

அந்தக் கோபத்தில்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அதேநேரத்தில் வைகோ தி.மு.க-விலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பிக்கவும், அவருடன் இணைந்துவிட்டேன்."

- மல்லை சத்யா (துணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க)

பதவி உயர்வு... பதக்கம்... ஓய்வு!

"எஸ்.ஐ தேர்வெழுதி ஒரு கண்ணியமிக்க காவல்துறை அதிகாரியாக வலம் வந்திருப்பேன். உசிலம்பட்டியில் பி.ஏ படிக்கும் வரைக்கும்கூட அந்த எண்ணம்தான் இருந்தது. அப்பா எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தீவிரமான அ.தி.மு.க காரர். எங்கள் ஒன்றியத்தின் செயலாளராகவும் இருந்தார். அப்பா மறைவுக்குப் பிறகுதான் அரசியலுக்கு வந்து ஏதாவது சாதிக்கவேண்டும் என முடிவெடுத்து, அரசியலில் இறங்கினேன்.

எஸ்.ஐ ஆகவேண்டும் என நினைக்கக் காரணம், சமூகத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர, தவறான பாதையில் செல்லும் மக்களைக் கட்டுப்படுத்த, திருத்த காவல்துறை அதிகாரி களால் முடியும் என நம்பினேன். எஸ்.ஐ ஆகியிருந்தால் இந்நேரம் பல பதவி உயர்வுகளோடும் பதக்கங்களோடும் இந்த வருஷத்தில் ரிட்டையர்டு ஆகியிருப்பேன்.

``ஜெ. கூட்டத்துக்காக என் உணவகம் தரைமட்டம் ஆகாதிருந்தால்..?" - மனம் திறக்கும் மல்லை சத்யா!

ஆனால், அரசியலில் ஆர்வம் உண்டான பிறகு அதைப் பற்றி நான் எப்போதும் யோசித்ததில்லை. அரசியலில் அதைவிட பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது."

- தங்க தமிழ்ச்செல்வன் (கொள்கைபரப்புச் செயலாளர், தி.மு.க)

நடிக்க வரலைனா என்னவா ஆகியிருப்பீங்க?' என்று நடிகர் நடிகைகளைப் பார்த்துக் கேட்டு சலித்துப் போய்விட்டதால் ஒரு மாறுதலுக்கு அரசியல்வாதிகளிடம் 'நடிக்க வரவில்லை என்றால்... ஸாரி ஸாரி... அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், நீங்கள் என்னவாக ஆகியிருப்பீர்கள்?' என்று கேட்டோம். அதற்கான பதில்கள்தான் மல்லை சத்யாவும், தங்க தமிழ்ச்செல்வனும் மேலே கூறியிருப்பது.

இவர்கள் இருவர் போலவே மேலும் 5 அரசியல்வாதிகள் மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். அதை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால்..? Click Here https://bit.ly/2y1yflR

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு