Published:Updated:

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்துவருவதால், கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்விதமாக, கட்சிக்குள் தேர்தல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடவில்லை. அதேசமயம், யாரையும் ஒருசார்பாக ஆதரிக்கவும்போவதில்லை என காந்தி குடும்பத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதனால் தேர்தல் வேட்பாளர்களான சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே இருமுனைப் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உட்பட பலரும் வாக்களித்தனர். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள பாரத் ஜோடோ யாத்ரா முகாமில் வாக்களித்தார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

அதைத் தொடர்ந்து டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் மகள் பிரியங்கா காந்தியுடன் வாக்களித்த சோனியா காந்தி, ``இதற்காகத்தான் நெடுங்காலமாக நான் காத்திருந்தேன்" என்று கூறினார். மேலும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கட்சியில் முதன்முறையாக வாக்களித்தார். இதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஜிதேந்திர பிரசாத்தை தோற்கடித்து சோனியா காந்தி தலைவராக வெற்றிபெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்திருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் கார்கே இனி காங்கிரஸ் கட்சி சார்ந்த விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.