Published:Updated:

கோவா: கிங்மேக்கராகும் மம்தா பானர்ஜி?! - பாஜக, காங்கிரஸ் திட்டம் என்ன?!

பிரதமர் மோடியுடன் முதல்வர் சாவந்த்

கோவாவில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பதால் சிறிய கட்சிகளுடன் பாஜக-வும், காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளன.

கோவா: கிங்மேக்கராகும் மம்தா பானர்ஜி?! - பாஜக, காங்கிரஸ் திட்டம் என்ன?!

கோவாவில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பதால் சிறிய கட்சிகளுடன் பாஜக-வும், காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளன.

Published:Updated:
பிரதமர் மோடியுடன் முதல்வர் சாவந்த்

கோவாவில் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. இது தேர்தல் முடிவுகளுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகும் என 10 -ம் தேதி தெரிந்துவிடும். என்றாலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 16 இடங்கள் கிடைக்கும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்வது பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் சராசரி அளவாக இருக்கிறது. இதனால், ஒருவேளை அப்படியான நிலை வந்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யாருக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முயன்றது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

ஆனால் காங்கிரஸ் அதற்கு மறுத்துவிட்டது. இதனால் இப்போது மம்தா பானர்ஜி காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு கொடுப்பாரா என்பது சந்தேகமே. அதே சமயம் மேற்கு வங்கத்தில் பாஜக-வுடன் மம்தா பானர்ஜி கடுமையாக மோதிக்கொண்டிருக்கிறார். இதனால் பாஜக-வுக்கு ஆதரவு கொடுப்பாரா என்பது சந்தேகமே.

மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி கடந்த முறை பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியிலிருந்து வெளியில் வந்துவிட்டது. அந்தக் கட்சிக்கும் சில இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. கடந்த முறை 17 இடங்களில் வெற்றிபெற்றும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டது. வெறும் 13 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக ஆட்சியமைத்தது. அது போன்ற ஒரு நிலை இப்போது வந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது.

இவ்விவகாரத்தை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து கோவா முதல்வர் சாவந்த், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அங்கும் தொங்கு சட்டமன்றமே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism