Published:Updated:

ஜனாதிபதி தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

மம்தா பானர்ஜி

ஜனாதிபதி தேர்தலில் 776 எம்.பி-க்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏ-க்களின் 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 மதிப்பிலான வாக்குகள் உள்ளன.

ஜனாதிபதி தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

ஜனாதிபதி தேர்தலில் 776 எம்.பி-க்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏ-க்களின் 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 மதிப்பிலான வாக்குகள் உள்ளன.

Published:Updated:
மம்தா பானர்ஜி

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்-ன் பதவி காலம் அடுத்த மாதம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நாட்டின் 15-வது ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகளை ஜூலை 21-ம் தேதி தலைமைத் தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இந்த தேர்தலில் 776 எம்.பி-க்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏ-க்களின் 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 மதிப்பிலான வாக்குகள் உள்ளன. இதில் 50 சதவிகிதத்துக்கும் மேல் வாக்கு பெறுபவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொள்வார்.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்
ட்விட்டர்

இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி, 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 மதிப்பிலான வாக்குகள் கைவசம் வைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எந்த அணியையும் சேராத மாநிலக் கட்சிகளிடம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 194 வாக்குகள் உள்ளன. பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு குறைந்த மதிப்பிலான வாக்குகளே தேவை. எனவே, மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று பா.ஜ.க வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
ட்விட்டர்

இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்," குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு ஜூன் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்த கடிதம் மூலம் அழைப்பு விடுக்கிறோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்திருக்கும் வேளையில் மம்தா பானர்ஜியின் ஒருங்கிணைக்கும் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism