Published:Updated:

``பாஜக-வை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும்!" - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

`வரும் 2024 தேர்தலில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்துதான் பா.ஜ.க-வை தோற்கடிக்க முடியும். மேற்கு வங்கத்தில் முடிந்தது என்றால் நம் எல்லோரும் சேர்ந்தாலும் முடியும்.' - மம்தா

``பாஜக-வை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும்!" - மம்தா பானர்ஜி

`வரும் 2024 தேர்தலில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்துதான் பா.ஜ.க-வை தோற்கடிக்க முடியும். மேற்கு வங்கத்தில் முடிந்தது என்றால் நம் எல்லோரும் சேர்ந்தாலும் முடியும்.' - மம்தா

Published:Updated:
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, ``பா.ஜ.க-வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் வரும் 2024 லோக்சபா தேர்தலில் ஒரே அணியில் நிற்க வேண்டும். ஒருவேளை காங்கிரஸ் அதன் வரட்டு கௌரவத்தால் தனித்து நின்றால் நிற்கட்டும். ஆனால், வரும் 2024 தேர்தலில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்துதான் பா.ஜ.க-வை தோற்கடிக்க முடியும். மேற்கு வங்கத்தில் முடிந்தது என்றால் நம் எல்லோரும் சேர்ந்தாலும் முடியும்.

பாஜக
பாஜக

காங்கிரஸ் தான் மேகாலயா மற்றும் சத்திஸ்கரில் பா.ஜ.க வெற்றிபெற உதவியது. மேலும், இந்த பட்ஜெட்டில் வரி குறைப்பு வைரத்துக்கு தானே? இரண்டே இரண்டு நபர்கள் தான் இந்தியாவின் எதிர்காலத்தோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு தேவைப்படுவது உணவும், வேலையும் தானே தவிர வைர கற்கள் அல்ல. இந்த நாட்டை காக்க யாரெல்லாம் பா.ஜ.க தோற்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் பயணிக்க வேண்டியது அவசியம். அதை மீறி உங்களின் பிடிவாதத்தால் தனித்து நிற்க முடிவு செய்தால் பரவாயில்லை. நான் தனியாக நின்று எதிர்கொள்கிறேன்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism