Published:Updated:

`70 ஆண்டுகளுக்குப் பின்னும் குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமா?' - கொதிக்கும் மம்தா #CAA

எதிர்க்கட்சிகளை பாகிஸ்தானோடு தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி - மம்தா
மோடி - மம்தா

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சிகளும் தமிழகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

மோடி
மோடி

இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளை மென்மையாகவே கையாண்டனர். சமீபத்தில் கர்நாடக மாநிலம் தும்கூரில் பேசிய பிரதமர் மோடி, ``பாகிஸ்தானில் துன்புறும் சிறுபான்மையினர், அகதிகளாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேச மறுக்கின்றன. மாறாக, அகதிகளுக்கு எதிராகப் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர்.

Shocking: Chennai youth died while cleaning the septic tank!

காங்கிரஸ் மட்டும் அதன் கூட்டணிக் கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிராக ஏன் மௌனமாக இருக்கின்றன என்ற கேள்வி நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்புங்கள். சி.ஏ.ஏ-க்கு எதிராகப் போராடுபவர்கள் பாகிஸ்தானை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்த சுரண்டல்களுக்கு எதிராக உங்கள் குரல்களை எழுப்புங்கள்"  என்று பேசியிருந்தார்.

மம்தா
மம்தா

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிலிகுரியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசியபோது, ``சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்தும் மக்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமென்பது அவமானகரமானது. இந்தியா மிகப்பெரிய கலாசாரமும் பாரம்பர்யமும் கொண்ட நாடு. ஏன் பிரதமர் நமது நாட்டை எப்போதும் பாகிஸ்தானோடு ஒப்பிடுகிறார்? அவர் இந்தியாவுக்கு பிரதமரா, இல்லை பாகிஸ்தானுக்குத் தூதரா? ஏன் அனைத்து விஷயத்துக்கும் பாகிஸ்தானையே இழுக்கிறீர்கள்? பிரதமர் என்.ஆர்.சி இருக்காது என்கிறார். ஆனால், உள்துறை அமைச்சர், மற்ற அமைச்சர்களோ என்.ஆர்.சி இருக்குமென்று பேசி வருகின்றனர். என்.ஆர்.சி பற்றி பா.ஜ.க வேண்டுமென்றே குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது'' என்று பேசியுள்ளார்.