Published:Updated:

`குடிமராமத்துப் பணிகளில் ஊழல்!’ - சிபிஐ விசாரணை கோரும் மாணிக்கம் தாகூர் எம்.பி

பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. காவல்துறையும் நீதித்துறையும் இந்த வழக்குகளில் காலதாமதம் செய்வதால், மக்களுக்கு அவற்றின்மீது நம்பிக்கை குறைந்துவருகிறது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர் ( ஆர்.எம்.முத்துராஜ் )

நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நேற்று விருதுநகரில் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது, ``தமிழகத்தில் நடந்த குடிமராமத்துப் பணியில் ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் யாருக்கு குடிமராமத்துப்பணி ஒப்பந்த வேலைகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
ஆர்.எம்.முத்துராஜ்

முன்னேறத் துடிக்கும் மாவட்டமாக அறிவித்தும், விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். ஆனால், சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்பட மாட்டாது, வழக்கமான நிதியின் மூலம் வளர்ச்சிப் பணியைச் செய்யுங்கள் என்று மத்திய அரசு கூறியது.

விருதுநகர் மாவட்ட தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப்பொருளை பெட்ரோலிய நிறுவனம் மூலம் வழங்க வலியுறுத்தியபின்புதான் அக்கோரிக்கை ஏற்கப்பட்டு, மூலப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
ஆர்.எம்.முத்துராஜ்

வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தில் பிறந்த நிர்மலா சீதாராமனுக்கு வெங்காயம், பூண்டு விலை தெரியவில்லை. அவருக்கு அம்பானி, அதானியின் பொருளாதார நிலை பற்றிய கவலைதான் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இதை ஏற்க மறுக்கிறது.

நித்யானந்தா உட்பட, நாட்டில் உள்ள போலிச் சாமியார்கள் ஏதாவதொரு வகையில் மோடியுடன் தொடர்பில் உள்ளார்கள். குஜராத் அரசு ஆதரவில்லாமல் அவரால் எப்படி அங்கு ஆசிரமம் நடத்த முடியும்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
ஆர்.எம்.முத்துராஜ்

பாலியல் குற்றம் புரிவோர் அனைவரையும் சுட்டுத்தள்ள வேண்டுமென்றால், எத்தனை பேரைச் சுடுவது? பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. காவல்துறையும் நீதித்துறையும் இந்த வழக்குகளில் காலதாமதம் செய்வதால், மக்களுக்கு அவற்றின்மீது நம்பிக்கை குறைந்துவருகிறது'' என்றார்.