Published:Updated:

`இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்?' - சசிகலா போடும் சிறைக் கணக்கு; விவரிக்கும் உறவுகள்

சசிகலா
சசிகலா

`தன்னை வரவேற்க பெரும் கூட்டம் வர வேண்டும், ஒவ்வொரு நாளும் அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த வேண்டும்' என சசிகலா விரும்புகிறார்.

தற்போதுள்ள சூழலில் சிறையில் இருந்து வெளியே வருவது அவ்வளவு சரியானதாக இல்லை எனக் கணக்கு போடுகிறார் சசிகலா. தனக்கான அரசியல் பயணத்தில் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய அளவுக்கு சில திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறார் என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.

சசிகலா
சசிகலா

பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி விரைவில் வெளியே வர இருக்கிறார் எனப் பரவலாகப் பேசப்பட்டுவரும் நிலையில் அ.தி.மு.க-வில் பலவிதமான விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து, சசிகலா தரப்பில் பேசுகிறவர்கள், அவர் இப்போது வெளியே வருவதற்கான சூழ்நிலை இல்லை, சரியான நேரத்திற்காக சசிகலா காத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

இதுகுறித்து சசிகலா வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம். ``சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்கள் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இடையிலேயே சசிகலாவை வெளியே எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

போயஸ் கார்டன் புது வீடு;  தஞ்சைப் பளிங்கு மாளிகை! -எங்கே தங்குவார் சசிகலா?

ஆனால், இப்போது முறைப்படியே தண்டனை காலத்தை அனுபவித்து முடித்து விடுதலையாகி வெளியே வருவதற்கான தகுதியை அடைந்துவிட்டார். ஆனால், சில கட்சிகள் ஏதோ பி.ஜே.பி உதவியுடன் சீக்கிரம் வெளியே வருவதாகத் தவறான தகவல்களை கிளப்பிவிடுகின்றன.

சசிகலா
சசிகலா

இந்த வழக்கு பதியப்பட்டபோதும் அதன் பிறகும் இரண்டு முறை சசிகலா கைது செய்யப்பட்டு சிறையிலிருந்திருக்கிறார். ஒருமுறை ஜெயலலிதா சசிகலாவுக்கு முன்னதாகவே வெளியே வந்துவிட்டார். அதன்பிறகு, கொஞ்ச நாள்கள் சிறையிலிருந்து விட்டு வந்த சசிகலாவை போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவே ஆரத்தி எடுத்து வரவேற்றார் என அப்போது பேச்சுக்களும் கிளம்பின.

தொடக்கத்தில் சிறையில் இருந்த நாள்கள், இப்போது சிறைத் தண்டனை அனுபவித்தது மற்றும் சிறை விதிகளின்படி கிடைக்கும் நன்னடத்தைக்காக கழிக்கப்படும் நாள்கள் இவையெல்லாம் சேர்த்து 4 ஆண்டுகளுக்கான தண்டனை முடிந்துவிட்டது. இதையடுத்து, சசிகலா வெளியே வருவதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை செலுத்த வேண்டும். அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சசிகலா
சசிகலா

ஆனால், கொரோனா பரவுதல், பொதுப் போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் இப்போது வெளியே வருவதை அவர் விரும்பவில்லை. இப்போது வந்தால் பெரிய அளவில் மாஸ் காட்ட முடியாது. அத்துடன் வீட்டில் அடைப்பட்டு கிடக்க வேண்டும். கட்சிப் பணிகள் எதையும் பார்க்க முடியாது. யாரையும் சந்திக்க முடியாது. தன்னை பார்ப்பதற்கும் யாரும் வர முடியாது. இதுபோன்ற காரணங்களால் வெளியே வந்தது, ஒரு செய்தியாக மட்டுமே இருக்கும் பெரிய மாற்றத்தை உண்டாக்காது என நினைக்கிறார் சசிகலா.

தவிர, `இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்... 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தோம். நம்மை விட்டுச் சென்ற அனைத்தும் நம் கைக்கு கிடைக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நாம் பிடிக்க வேண்டும். அதற்கு நான் வெளியே வருவது மாற்றத்தை உண்டாக்குவதுடன் பெரிய மாஸாகவும் அமைய வேண்டும்' எனக் கணக்கு போடுகிறார். தான் வந்த பிறகு ஒவ்வொரு நாளும் அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ வேண்டும் என விரும்புகிறார்.

கொரோனா: `தவறான திசை; நிலைமை மேலும் மோசமடையும்!’ - எச்சரிக்கும் WHO

அதற்காகத்தான் அவர் வெளியே வருவது தள்ளிப்போகிறது. சொல்லப்போனால் சிறையிலிருந்து வெளியே வருவதற்கு அவருக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டது. அபராதத் தொகையான 10 கோடியை எப்போது செலுத்துகிறாரோ அடுத்த சில தினங்களில் அவர் வெளியே வந்துவிடுவார்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு