Published:Updated:

``கூட்டம் இல்லை, ஆடம்பரம் இல்லை..!" - மாஸ்க் அணிந்து திருமணத்தை நடத்திய விஜயகாந்த், பிரேமலதா #Corona

மாஸ்க் அணிந்த விஜயகாந்த், பிரேமலதா
மாஸ்க் அணிந்த விஜயகாந்த், பிரேமலதா

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா ஆகியோர், முகத்தில் மாஸ்க் அணிந்து நிர்வாகியின் இல்ல திருமணத்தை இன்று நடத்தி வைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இன்று ஊரடங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி, நாடுமுழுவதும் இன்று மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. வணிக வளாகங்கள் மூடப்பட்டன. அதன்காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடித்தது. சென்னையின் முக்கிய சாலையான அண்ணசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் ஆள்நடமாட்டம் இல்லை. ஒருசில வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்றன.

கொரோனா முன்னெச்சரிக்கை; தூத்துக்குடியில் மாஸ்க் அணிந்து திருமணம் செய்துகொண்ட மணமக்கள்!
மாஸ்க்கோடு விஜயகாந்த், பிரேமலதா
மாஸ்க்கோடு விஜயகாந்த், பிரேமலதா

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே போதிய ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கால், தமிழகத்தில் இன்றைய தினம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் சிலர் திருமணத்தை தள்ளிவைத்தனர். திட்டமிட்ட நாளில் திருமணத்தை எளிமையான முறையில் சிலர் இன்று நடத்தினர். மக்கள் கூடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளதால், சொற்ப எண்ணிக்கையில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

சென்னையில் இன்று நடந்த திருமணத்தில், மணமக்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் என 10-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், திருமண நிகழ்ச்சிகள் களைக்கட்டவில்லை. விழாவில் பங்கேற்ற மணமக்கள் முதல் அவர்களின் உறவினர்கள் வரை முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்துகொண்டவர்கள், கைகளைக் கழுவும் திரவத்தைப் பயன்படுத்தினர். மண்டபத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த ராட்சத பொம்மை யானைக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் கட்டிவிடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
#NowAtVikatan
திருமணம்
திருமணம்

தே.மு.தி.க மாநில தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர் வேணுராமின் இல்லத் திருமண விழாவை இன்று நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக திருமண விழாவை எளிமையாகக் கொண்டாட வேணுராம் இன்று முடிவுசெய்தார்.

இதையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. மண்டபத்தில் நடத்தவேண்டிய திருமணத்தை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிலேயே நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற விஜயகாந்த், பிரேமலதா மற்றும் மணமக்கள் விமல்குமார், கமலி ஆகியோரும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர்.

சுய ஊரடங்கு தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு... தமிழக அரசு அறிவிப்பு! #JantaCurfew
திருமணம்
திருமணம்

மாங்கல்யத்தை விஜயகாந்த் எடுத்துக் கொடுக்க, மணமகன் விமல்குமார், மணமகள் கமலிக்கு தாலி கட்டினார். விழாவில் கைகழுவும் திரவம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. திருமண விழாவில் யாரும் கைக்குலுக்கி வாழ்த்துகளைச் சொல்லவில்லை. கைகளைத் தட்டியபடி மணமக்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள், செல்போனில் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு