Published:Updated:

“கூட்டுக் களவாணி முதலாளித்துவம்!” - வெளுத்து வாங்கிய பிரகாஷ் காரத்

பிரகாஷ் காரத்
பிரீமியம் ஸ்டோரி
பிரகாஷ் காரத்

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சமடைந்திருக்கிறது. பொதுத்துறை தனியார்மயமாக்கப்படுகிறது. அதேசமயம், கார்ப்பரேட் முதலாளிகள் செழிப்புடன் வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள்

“கூட்டுக் களவாணி முதலாளித்துவம்!” - வெளுத்து வாங்கிய பிரகாஷ் காரத்

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சமடைந்திருக்கிறது. பொதுத்துறை தனியார்மயமாக்கப்படுகிறது. அதேசமயம், கார்ப்பரேட் முதலாளிகள் செழிப்புடன் வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள்

Published:Updated:
பிரகாஷ் காரத்
பிரீமியம் ஸ்டோரி
பிரகாஷ் காரத்

‘இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம், செப்டம்பர் 5-ல் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. செஞ்சட்டைத் தோழர்களின் அணிவகுப்பு புடைசூழ, மேடைக்கு வந்தார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

``இந்திய அரசியலமைப்புச் சட்டமல்ல, சனாதன மனுநீதி சட்டமே மோடி அரசை வழிநடத்துகிறது. `தோல் இருக்க சுளை விழுங்கும்’ பழமொழிபோல இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அப்படியே போட்டுவைத்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்-ஸின் 100 ஆண்டுக்கால அஜண்டாவை நிறைவேற்றுவது அவர்களின் திட்டமாக இருக்கிறது” என்றார் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.

மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ``ஆர்.எஸ்.எஸ் தொண்டனாக இருக்கக்கூடிய யஷ்வந்த் ஷிண்டே என்பவர் ஒரு வாக்குமூலத்தைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், `இந்தியாவில் நடந்த அத்தனை குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-தான் என பகிரங்கமாகச் சொல்லுவேன்’ என்றிருக்கிறார். இதை பா.ஜ.க மறுத்ததுண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.

“கூட்டுக் களவாணி முதலாளித்துவம்!” - வெளுத்து வாங்கிய பிரகாஷ் காரத்

பின்னர் முக்கிய அழைப்பாளர் பிரகாஷ் காரத் மைக்கைப் பிடித்து, ``தோழர்களே நண்பர்களே வணக்கம். நான் ஆங்கிலத்தில் பேசப்போகிறேன். மன்னிக்கவும்” என தமிழில் கேட்டுக்கொள்ள கூட்டம் களைகட்டியது. மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழிபெயர்க்க, ஆங்கிலத்தில் உரையைத் தொடர்ந்தார் பிரகாஷ் காரத்.

``பா.ஜ.க அரசின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, மக்கள் பொருள்கள் வாங்குவதையே குறைத்துவிட்டார்கள். அதிலும், பெட்ரோலியப் பொருள்களின் வரி விதிப்பைப் பொறுத்தவரை, `கலால்’ வரியை உயர்த்தினால் அதில் மாநில அரசுக்கும் பங்கு கொடுக்கவேண்டிவரும் என்பதற்காக, திட்டமிட்டு `செஸ்’ வரியை உயர்த்துகிறார்கள். அரிசி, பால், நெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கும் 5% ஜி.எஸ்.டி வரி விதித்திருக்கிறார்கள். ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்யவும் ஜி.எஸ்.டி., கேன்சல் செய்யவும் ஜி.எஸ்.டி.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சமடைந்திருக்கிறது. பொதுத்துறை தனியார்மயமாக்கப்படுகிறது. அதேசமயம், கார்ப்பரேட் முதலாளிகள் செழிப்புடன் வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்தபோது அவரின் குஜராத் நண்பர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி. தற்போது அதானியின் சொத்து மதிப்பு 11 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்று உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக கௌதம் அதானி உருமாறியிருக்கிறார். அதேபோல முகேஷ் அம்பானியும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் மோடியின் ஆட்சியை `கூட்டுக் களவாணி முதலாளித்துவம்’ என்கிறோம். எனவே, பா.ஜ.க அல்லாத மாநிலங்களை ஆளும் கட்சிகள், மக்களைத் திரட்டி பா.ஜ.க அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்” என முழங்கினார்.