Published:Updated:

டெல்லி திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ்... வைரலாகும் வீடியோ!

சிறையில் மசாஜ்

டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சருக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ வெளியாகியிருக்கிறது.

டெல்லி திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ்... வைரலாகும் வீடியோ!

டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சருக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
சிறையில் மசாஜ்

டெல்லி திகார் சிறையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அடைக்கப்பட்டிருக்கிறார். பண மோசடி வழக்கில் ஜெயின் கடந்த மே மாதம் அமலாக்கப்பிரிவால் கைதுசெய்யப்பட்டார். ஜெயின் மீது ஏற்கெனவே மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். சிறையில் போதிய சலுகைகள் பெறவும், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி பெறவும் ஆம் ஆத்மியின் ஜெயினிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். சுகேஷ் ஆரம்பத்தில் திகார் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிறையில் சுகேஷ் பணபலத்தைப் பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். இதனால் அவர் தற்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் ஜெயினுக்குச் சிறையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லி திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ்... வைரலாகும் வீடியோ!

இது தொடர்பாக பாஜக தலைவர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அமைச்சர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ அதில் இடம்பிடித்திருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்புதான் திகார் சிறை அதிகாரி அஜித்குமார், அமைச்சர் ஜெயினுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்குவதாகக் கூறி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்போது அமைச்சருக்குச் சிறையில் மசாஜ் செய்யப்படுவது போன்ற வீடியோ வெளியாகி, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் அளித்த பேட்டியில், ``ஆம் ஆத்மி கட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும், விஐபி கலாசாரத்தை ஒழிக்கவும் கட்சியை ஆரம்பித்தீர்கள். ஆனால் ஊழல் கறை படிந்த ஒருவருக்குச் சிறையில் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன” என்று தெரிவித்தார்.

கடந்த மாதமே அமலாக்கப்பிரிவு சிறையில் அமைச்சர் ஜெயின் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகக் கூறி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தது. ஏற்கெனவே சுகேஷ் சந்திரசேகர் அமைச்சர் ஜெயின் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார். இதனால் குஜராத் தேர்தலில் கால் பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.