Published:Updated:

மாயத்தேவரும் இரட்டை இலையும்... நினைவுகளைப் பகிரும் சின்னாளபட்டி மக்கள்!

மாயத்தேவர்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில்வைத்து தேர்தலில் போட்டியிடுவோருக்குச் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் மொத்தமிருந்த 24 சின்னங்களில் இரட்டை இலைச் சின்னத்தை மாயத்தேவர் தேர்வுசெய்தார்.

மாயத்தேவரும் இரட்டை இலையும்... நினைவுகளைப் பகிரும் சின்னாளபட்டி மக்கள்!

மதுரை கலெக்டர் அலுவலகத்தில்வைத்து தேர்தலில் போட்டியிடுவோருக்குச் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் மொத்தமிருந்த 24 சின்னங்களில் இரட்டை இலைச் சின்னத்தை மாயத்தேவர் தேர்வுசெய்தார்.

Published:Updated:
மாயத்தேவர்

தி.மு.க-விலிருந்து 1972-ல் எம்.ஜி.ஆர் வெளியேறிய பின்னர், முதன்முதலாக 1973-ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில்தான் இரட்டை இலைச் சின்னம் தமிழக மக்களுக்கு அறிமுகமானது.

மாயத்தேவர்
மாயத்தேவர்

அதிமுக தொடங்கப்பட்டு ஆறு மாதங்களே ஆன நிலையில் முதல் தேர்தல் களத்தை திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆர் சந்தித்தார். இதில் அதிமுக சார்பில் மாயத்தேவரை நிறுத்த முடிவு செய்தார். அப்போது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்தது திண்டுக்கல். இதனால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில்வைத்து தேர்தலில் போட்டியிடுவோருக்குச் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் மொத்தமிருந்த 24 சின்னங்களில் இரட்டை இலைச் சின்னத்தை மாயத்தேவர் தேர்வுசெய்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு ``ஏன் இரட்டை இலைச் சின்னத்தை தேர்வு செய்தீர்கள்?’’ என எம்ஜிஆர் கேட்டிருக்கிறார். ``வடமாநிலங்களில் அரசியல்வாதிகள் வெற்றியைக் குறிக்கும் வகையில் இரட்டை விரலைக் காட்டும் வழக்கம் இருக்கிறது. நாமும் பிரசாரத்தின்போது இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில் இரட்டை விரலைக் காட்டி ஓட்டுக் கேட்கலாம். சுவர், பதாகைகளில் இரட்டை இலையை எளிதாக வரைந்துவிடலாம். இது மக்களிடம் எளிதில் சென்றடையும்” என விளக்கியிருக்கிறார்.

மாயத்தேவர்
மாயத்தேவர்

இதையேற்ற எம்.ஜி.ஆர் செல்லுமிடமெல்லாம் இரட்டை விரலைக் காட்டி, இரட்டை இலைச் சின்னத்தை மக்கள் மனதில் பதித்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இறப்புக்குப் பிறகும் அதிமுக வலுவாக இருக்க இரட்டை இலைச் சின்னம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

`கெட்டிக்காரர், ஆனால் கோபக்காரருங்க’ என மாயத்தேவர் நினைவுகளைப் பகிர்ந்த சின்னாளபட்டி மக்கள், தொடர்ந்து, ``மூக்கையா தேவருக்கு எதிராகக் களமிறங்கியபோதும் எம்ஜிஆரின் செல்வாக்கால் அமோக வெற்றிபெற்றார். திண்டுக்கல்லில் ஒரு பகுதியைக்கூட எம்ஜிஆர் விடவில்லை. மக்களும் அவரின் பின்னாடியே சுற்றிச் சுற்றி வந்தனர். அந்தத் தேர்தல், திருவிழாபோல இருந்தது. முன்கோபியான மாயத்தேவர் உசிலம்பட்டி அருகே பிறந்தவர். வழக்கறிஞரானதும் சின்னாளபட்டியில் பெண் எடுத்தார். எம்.பி ஆனபோதிலும் நல்ல வீடு கட்டிக்கொள்ளாதவர். எம்.பி ஆனதும் சின்னாளபட்டியில் உள்ள ஒரு பழைய வீட்டை வாங்கித்தான் குடியேறினார்.

அஞ்சலி
அஞ்சலி

நேர்மையாக இருந்ததால் யாருக்கும் வளைந்து நெளிந்து செல்லாமல் இருந்தார். மேலும் ஒரே கட்சியில் இல்லாமல் கோபித்துக்கொண்டு கட்சி மாறினார். எம்.பி-யாக இருந்தும் சொத்து சேர்க்கவில்லை. வாரிசுகளை அரசியலில் ஈடுபடுத்தவில்லை. இவருடைய உதவியாளராக இருந்த சீனிவாசன்தான் பின்னாளில் அமைச்சராக, கட்சிப் பொருளாராக இருக்கிறார். இரட்டை இலை இருக்கும் வரை அவரின் பெயரும் நிலைத்திருக்கும்” என்றனர்.