Published:Updated:

`CAA-வை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ; வாய்ஸ் கொடுத்த பா.ஜ.க!'- அதிரடி காட்டிய மாயாவதி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பகுஜன் சமாஜ் பெண் எம்.எல்.ஏ கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மாயாவதி
மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் வேளையில் அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஆதரவாக பேசியது சர்ச்சையை கிளப்பியது. “குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரை வாழ்த்துகிறேன். இது ஒரு சிறந்த முடிவு இது முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த இத்தகைய முடிவுகளை எடுக்கவில்லை.

நானும் எனது குடும்பத்தினரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம்” என பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ ரமாபாய் பரிஹார் பேசியிருந்தார்.

 ரமாபாய் பரிஹார்
ரமாபாய் பரிஹார்

‘ரமாபாய் பரிஹாரின் தைரியமான பேச்சை பா.ஜ.க வரவேற்கிறது. மத்திய பிரதேசத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த பல அரசியல்வாதிகள் குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டுக்கு நல்லது என்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் அவர்களுக்கு பேசத் துணியவில்லை. இப்போது அவர்கள் பேசுவார்கள் என்று நினைக்கிறேன்’ என மகாராஷ்டிரா பா.ஜ.க தரப்பு அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தது.

'தடுத்து நிறுத்திய போலீஸ்; டூ வீலரில் பயணமான பிரியங்கா’- உ.பி அரசைச் சுற்றும் அடுத்த சர்ச்சை!

இந்நிலையில் தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்த பேசிய ரமாபாய் பரிஹாரரை எம்.எல்.ஏவை அக்கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடியாக நீக்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மாயாவதி, “பகுஜன் சமாஜ் ஒழுக்கமான கட்சி. இதனை மீறி செயல்படுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ராம்பாய் பரிஹாரி கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். மேலும் அவர் கட்சி கூட்டங்களில் கலந்துக்கொள்ளக்கூடாது.

 ரமாபாய் பரிஹார்
ரமாபாய் பரிஹார்

குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவாக தாக்கல் செய்தபோதே, இது அரசியலமைப்புக்கு எதிரானது என குரல் கொடுத்தது பகுஜன் சமாஜ் கட்சி. எங்கள் கட்சி இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது, அதை ரத்து செய்யுமாறு குடியரசுத்தலைவரை நாங்கள் வலியுறுத்தினோம். இந்நிலையில், ரமாபாய் பரிஹார் சட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்” என ரமாபாய் நீக்கத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.