Published:Updated:

மும்பை: `நான் நலமுடன்தான் இருக்கிறேன்!’ - மரணம் தொடர்பான வதந்திக்கு மேயர் கிஷோரி விளக்கம்

மேயர் கிஷோரி

சிவசேனாவைச் சேர்ந்த மேயர் கிஷோரியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. வரும் பிப்ரவரி மாதம் மும்பை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

மும்பை: `நான் நலமுடன்தான் இருக்கிறேன்!’ - மரணம் தொடர்பான வதந்திக்கு மேயர் கிஷோரி விளக்கம்

சிவசேனாவைச் சேர்ந்த மேயர் கிஷோரியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. வரும் பிப்ரவரி மாதம் மும்பை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

Published:Updated:
மேயர் கிஷோரி

மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர் சமீபத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரேலிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக வதத்தி பரவியது. 58 வயதான அவர் இறந்துவிட்டதாக இணையதளத்தில் செய்தி வைரலாகப் பரவியது. இந்தச் செய்தியால் மேயர் கிஷோரி அதிர்ச்சியடைந்திருக்கிறார். `தான் இன்னும் நலமுடன் இருப்பதாக’ அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிஷோரி அளித்த பேட்டியில், ``மீடியாக்கள் ஒரு செய்தியை உறுதி செய்யாமல் வெளியிடாதீர்கள். நான் உயிருடன், நலமாக இருக்கிறேன்.

மேயர் கிஷோரி
மேயர் கிஷோரி

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான், சிறிது நேரத்துக்கு முன்புகூட பருப்பு கிச்சடி சாப்பிட்டேன். இது பிரபல மீடியாக்களுக்குத் தெரியும். இது போன்ற செய்திகளை உறுதி செய்துவிட்டு வெளியிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேயர் கிஷோரி விரைவில் குணமடைய சுப்ரியா சுலே, எம்.பி.அர்விந்த் சாவந்த் உள்ளிட்டோர் இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

மும்பையில் கனமழையால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது மேயர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்த யாரோ இது போன்ற ஒரு செய்தியைப் பரப்பிவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த வதந்தியை யார் பரப்பியது என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். சிவசேனாவைச் சேர்ந்த மேயர் கிஷோரியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. வரும் பிப்ரவரி மாதம் மும்பை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism